அழகி ஜோதிகாவுக்கு அறிவையும் அருள்வாய்

4 comments
இவ்வளவு பெரியக் கோவிலை 
வீதிக்கு வீதிக் கட்டிவைத்த 
நம் முன்னோர்கள்
ஒருப் பள்ளிகூடம் கூட கட்டவில்லையே... 
என்று அம்மையார் ஜோதிகா கேட்குது...



இவ்வளவு பெரியக்  கோவிலை 
கட்டியவன் தான் குடியிருக்க 
வீடுகூட கட்டிக்கொள்ளவில்லையே 
என்றுக் கேட்க தோனலையே
உன்னையெல்லாம் என்ன வென்று சொல்வது..

கலைச் சாலையாக
விஞ்ஞானச் சாலையாக
மெய்ஞானச் சாலையாக
மருத்துவச் சாலையாக
நீதிச் சாலையாக
கல்விச் சாலையாக...
பலமுக பயன்பாட்டுச்  சாலைகளாகத்தான் 
அன்று கோவில்களைக் கட்டினார்கள்...

அறிவற்றவர்கள் இன்று  அதனை 
பணச் சாலைகளாக நடத்துகிறார்கள்!!

கல்வி அறிவு இல்லாமலா 
நாம் காகிதத்தில் கூட 
வரைய முடியாததை எல்லாம் 
கல்லில் செதுக்கி வைத்திருக்கிறான்...?

சத்தான உணவு வகைகள் 
இல்லாமலா கற்களை 
தூக்கி கோவில் கட்டியிருப்பான்..?

தரமான மருத்துவம் இல்லாமலா
கற்களை கையாண்டு இருப்பான்..? 

தரமானப் போக்குவரத்து 
இல்லாமலா மிகப் பெரும் பாறைகளை 
வெகுதூரம் கொண்டு சென்றான்..?

இஞ்சினியரிங் இல்லாமலா
பதினெட்டு மாடி கோவிலைக் கட்ட முடியும்?

நிர்வாகத் திறன்  இல்லாமலா 
ஆயிரம் வல்லுணர்களை  திறமைசாலிகளை 
உழைப்பாளிகளை இணைத்து 
கோவில்களை முழுவதுமாக
கட்டிமுடித்திருப்பான்..? 

அத்துனை துறையிலும் வம்சம் 
மேலும் சிறந்து விளங்க உதவியாக 
வரும் தலைமுறை கற்க உதவியாக 
பேரிடர் காலங்களில் அடைக்கலங்களாக 
முன்னோர்கள் கட்டி வைத்த கோவில்களை மதிக்காது...

முன்னோர்களையும், 
அவர்களின் திறமையையும், 
பழக்க வழக்கங்களையும்
மதிக்காது....மிதிப்பதும்

அவர்கள் கட்டிய கோவில்களால் 
நமக்கு என்ன பயன் 
என்று பேசுவதும்தான் பகுத்தறிவென்றால் 
அதுதான் திராவிடத்தின் 
தத்துவமென்றால்... 

உன் தத்துவத்தை உன்னோடு 
வைத்துக்கொள் எங்களிடம் காட்டாதே!

உயர்ந்த கோவில்களை என் முன்னோர்கள
தீர்வுகளாகக் கண்டு நாகரீகமாகக் 
கூடி வாழ்ந்த காலத்திலே 

உலகிலே உடையின்றி 
காட்டுமிராண்டிகளாய்
திருடர்களாகத் தானே எல்லோரும் வாழ்ந்தார்கள்? 

நீங்கள்  உடுத்திய ஆடை 
எப்படி உங்கள் மானத்தை காப்பதற்கோ..

அதுபோலதான் 
எம் முன்னோர்கள் கட்டிய கோவில் 
கோடிபேர் கூடி வாழ சூத்திரமான  
அறத்தை போதிக்கவும்,  காப்பதற்கும்...

பாரதிகள் விசித்திரத் தொழில் நுட்பவாதிகள்...  
கற்களை  செதுக்கி
மனித உள்ளங்களை வடிவமைத்தவர்கள்....

கோவில்களில் சிலையை வைத்து
இதயங்களில் இறைவனை வைத்தவர்கள்.... 

அனுப்பியவனை புரிந்து கொண்டு 
வாழ்க்கையை திருவிழாவாக ஆக்கியவர்கள்...

எமது பாட்டன் எனக்கு 
பெரிய வீடைக் கட்டவில்லை 
வேப்ப மரத்தை நட்டு வைத்தான் 

வேப்பமரத்திற்கு பதிலாக 
பெரிய வீடு கட்டியிருக்கலாம்.. 
பெரிய வீடு கட்டியிருந்தால் 
மரத்தைப் போலவே அதுவும் நிழல் தரும், 
நான் வீட்டிற்குள் உருண்டு புரண்டு வாழலாம்.. 
ஆனால் அந்த மரம் தரும் உயிர்காற்றை 
வீடு தராது மகளே...

ஐம்பது கிலோ கல்லை 
நம்மால் தூக்கமுடியாத போது.. 
80 டன் கல்லை 216 அடி உச்சியில் 
வைத்து கட்டிய நம் முன்னோர்களின் 
அறிவை உழைப்பை தியாகத்தை அன்பை
கொச்சைப் படுத்துவது 
ஒரு போதும் ஏற்க முடியாதது.. 

தஞ்சைக் கோவில் எதற்கு 
அதற்கு காணிக்கை எதற்கு 
என்று கேட்டாய்.. 

இருப்பவன் கொண்டுவந்து கொடுக்கவும்....
அதை இல்லாதவனுக்கு வினியோகிக்கவும் 
ஒரு தளமாகத்தான் கோவில் இருந்தது.. 

தெய்வத்தைப் பற்றிய அறிவு இருந்து...
இதை தெய்வத்திற்காக செய்தால் 
அங்கு பிழைகள் நடக்காது... அங்கே... 
கொடுத்தவனின் மனமும் கெடாது. 
பெற்றவனின் மனமும் கோணாது...

ஆனால் இன்று  தெய்வத்தைப் பற்றிய 
எந்த அறிவும் இல்லாமல்...

கோவிலில் வசூல் வேட்டை உண்டியல், 
பண வரிக்கு ஏற்ப சிறப்பு தரிசனம்...
மூடத்தனங்கள்  அனைத்தையும் 
கோவிலுக்குள்  கொண்டு வந்து...

அதை நிர்வாகம் செய்ய 
தெய்வ அறிவு இல்லாத 
'மனப்பாட மடையர்'களை 
அதிகாரிகளாகப் போட்டு பயமுறுத்தி...

கோவில்களை வரி மையங்களாக ஆக்கியது...
பகுத்தறிவில்லாத 
திராவிடக் கொழுந்துகள் தான்.. 

கிடைக்கும் ஒட்டுமொத்த உண்டியல் 
பணத்தில் 90%த்தை கொள்ளையடித்ததும் 
அதேத் திராவிடக் கொழுந்துகள் தான்.. 

கோவிலை கட்டியதற்கு பள்ளிக்கூடம் 
கட்டியிருக்கலாம் என்று கேட்கிறாய்...

இப்படி சொல்லித்தான் பல பள்ளிகூடம் 
கட்டப்பட்டது...

ஆனால் இன்று ஒரு LKG மாணவனுக்கு 
கல்விக்கட்டணம்.. மூன்று லக்ஷம்!

பகுத்தறிவு பேசிய அத்துனை 
திருட்டு முட்டாள்களும் கல்வியையும்,
மருத்துவத்தையும் காசுக்கு விற்று 
பகல் இரவுக்  கொள்ளையடிப்பதுதான் மிச்சம்.... 

கோவில் பண்பாடு பெரியோர் மூலம் 
வெள்ளை உள்ளத்தைக் 
கற்றும் பெற்றும் வாழும் 
ஏழைகளைக் கொள்ளையடிக்கும் 
கயவர்களை உற்பத்தி செய்யும் 
பள்ளிகளுடன் கோவில்களை 
ஒப்பிட்டுப் பேசுவது அநாகரீகம் மகளே! 

கோவிலுக்கு வந்ததால்...
எவனும் தற்கொலை செய்துகொள்ளவில்லை
விவாஹரத்து செய்துகொள்ளவில்லை
ஆனால் உள்ளத்தில் வலிமை பிறந்தது....
முழு வாழ்க்கையையும் வாழ உதவியது....
கூடி வாழ சக்தியைத் தந்தது....
குடும்பம் நடத்த புத்தியைத் தந்தது....
புயல்களுக்கிடையில் பிள்ளைகளைக் காக்க
உள்ள வலிமையைத் தந்தது....

கோவிலுக்கு வந்தால் 
விலகும் எண்ணமும் விலகுகிறது...
தற்கொலை எண்ணமும் விலகுகிறது...


ஆனால் 12 ஆண்டுகள் 
பள்ளிக்கூடம் சென்ற குழந்தை 
தற்கொலை செய்துகொள்கிறான்...
கல்லூரியில் கற்றவன் 
ஆண்டுக்கொரு விவாஹரத்து செய்கிறான்
இதெல்லாம் ஒரு கல்வியோ...
அல்லது 'கில்'வியோ...

இனிமேல் எந்தக் கொம்பனாலும் கட்ட முடியாத 
இப்படியான தெய்வீகக் கோவில்களே
பாரதிகளின் உள்ளங்களை வடிவமைத்த மந்திரச் சாலைகள்... 
பாரதிகளின் குடும்பங்களை வடிவமைத்த யந்திரச் சாலைகள்... 
பாரதிகளின் சுக வாழ்வை வடிவமைத்த தந்திரச் சாலைகள்... 
நம் உயர்வுகளின் தனிப்பெரும் தாய் மடிகள்... 
வளர்க கோவில்கள் - வாழ்க பாரதிகள்!!

4 comments:

  1. உயிர் வரை உணரச்செய்யும் உண்ணத் சிந்தனை. ஓம் குருப்யோ நமக!

    ReplyDelete
  2. வேல்முருகன்

    ReplyDelete