2017 சுனாமி உண்மையா?

Leave a Comment
September 25, 2017

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய பெருங்கடலில் பெரும் நிலநடுக்கம் ஏற்படும் ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை

2004ம் ஆண்டு சுனாமி ஏற்பட்ட போது தமிழக கடலோர பகுதிகள் பெரும் சேதமடைந்தன. பல ஆயிரம் உயிர்கள் கடல் நீருக்கு பலியாகின.

இந்நிலையில், கேரளாவில் உள்ள பி. கே. ரிசர்ச் அசோசியோஷன் பார் இஎஸ்பி என்ற ஒரு தனியார் ஆராய்ச்சி நிறுவனம் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது.

அதில், வருகிற டிசம்பர் 31ம் தேதிக்குள் இந்திய பெருங்கடலில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டு, ஆசியக் கண்டத்தின் கடற்கரைகள் அனைத்திலும் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டு கடல் எல்லைகள் மாறும்.
மேலும், இதன் தாக்கம் 11 நாடுகளை கடுமையாக பாதிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ளது, பாகிஸ்தான், நேபாளம், இந்தியா, சீனா, ஜப்பான், வங்கதேசம், தாய்லாந்து, இந்தோனேசியா, ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளில் பெரும் பாதிப்பு ஏற்படும். அப்போது கடலில் 120-180 கி. மீ. வேகத்தில் காற்று வீசும்.
கனமழை பெய்யும். எனவே, முன்னெச்சரிக்கையாக மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


                                     இது விஷயத்தில் நமது கருத்துக்கள்....

1. மிகப்பெரிய இயற்கை சீற்றம் வரும்போது முன்பே தெரிவதால் எவ்வளவு பெரிய நாட்டின் அரசும் எதுவுமே செய்ய முடியாது. இதுதான் உண்மை. இதை புரிந்துகொள்ளத்தான் வேண்டும்.


2. இன்று அரசு நிறுவனம் இல்லாத ஒரு அமைப்பு சொல்வதை ஏற்று, அரசு செலவு செய்தால், நாளை வேறு பலர் சொல்வதை எல்லாம் அரசு ஏற்கவும் செலவு செய்யவும் வேண்டும் - நல்லவர்கள் சொன்னாலும் சரி, கெட்டவர்கள் சொன்னாலும் சரி, உண்மையில் சொன்னாலும் சரி, பொய்யாக சொன்னாலும் சரி. அதனால் 'அரசு இவருடைய முன் ஊகத்தை ஏற்று செலவு செய்வது எப்படி சாத்தியம்' என்று தெரியவில்லை. மேலும், இந்தக் கடிதத்தின் வரிகளைப் பார்க்கும்போதும், இவரது பெட்டியில் பேச்சுக்களைக் கேட்கும்போதும், இவர் ஒரு தெளிவான அறிவு உள்ளவர் என்று யாரும் கருத வழி இல்லாமல் இருக்கிறது. இவரும், இவருது பேட்டிகளை கேட்டவர்களும், இவரது கருத்துக்களைக் கேட்டு, 'உடனடியாக அரசு முயற்சிகளை எடுக்கவேண்டும்' என்று அங்களாய்ப்பதும் நியாயமாகத் தெரியவில்லை. 


இன்றைய அரசியல் சாசனத்தில் உள்ள சிக்கல்கள் அனைவருக்கும் தெரியும். அரசும் அதற்கு கட்டுப்பட்டே நடக்க முடியும். ஆனால் தனிநபர்கள், குடும்பங்கள், குழுக்கள்,... போன்றவை  இந்த முன் ஊகங்களை பயன்படுத்திக்கொள்ள முடியும்.


3. மரணம் என்பது அனைவருக்குமே முடிவாகி விட்டது. 100 ஆண்டுக்குள் - என்று - என்பதுதான் கேள்வி. 'அது நானாக திமிராக ஓட்டி - ‘பைக்’கில் சாகலாம், சுனாமியால் சாகக்கூடாது -  அரசு உடனே காப்பாற்றவேண்டும்' என்றால் இது என்னவாதம் என்று யோசிக்கவேண்டி உள்ளது.

மரணத்தை காட்டி பயமுறுத்தத் தேவையில்லை. இப்படித்தான் இயற்கை. இவ்வளவுதான் வாழ்க்கை. அதை ஏற்கத்தான் மனதை தயார் செய்யவேண்டும். 'உயிரிழப்பு' என்றால் ஒடிந்து விழும் மனப்பான்மையை கைவிடவேண்டும். அதற்கு பகவத்கீதை படிக்கவேண்டும். வேறு தீர்வு இருப்பதாகத் தெரியவில்லை.


4. மனித முயற்சிக்கு உட்பட்ட காரியங்களில் மட்டுமே திட்டமிட முடியும். உதாரணமாக, நாடுமுழுவதும் மோட்டார் வாகனங்களை தடை செய்தால் தினசரி நடக்கும் பல ஆயிரம் விபத்து மரணங்களையும், கை, கால் போகுதளையும் தடுக்க முடியும்.

வாகனத்தில் சென்றால் உயிர் போகலாம், அறுவைசிகிச்சை செய்தால் உயிர் போகலாம்,... என்றெல்லாம் தெரிந்தே, ஆசை வசப்பட்டு அவைகளை ஏற்கிறோம். நம் கட்டுப்பாட்டில் உள்ள, தடுக்க முடியக்கூடிய, இவைகளில் நாம் மரணத்தை மறைமுகமாக அங்கீகரிக்கும்போது, நம் கட்டுப்பாட்டில் இல்லாத இயற்கை சீற்ற விஷயங்களில் உடனே நாம் 'அரசு முயற்சி எடுக்கவில்லை' - என்று அங்கலாய்க்கிறோம். இதனை நாம்  பரிசீலிக்கவேண்டும்.


5. பெற்றோரும்கூட தன் குழந்தையை பெரிய நோய் போன்ற பிடியிலிருந்து காப்பாற்ற - தனது பொருளாதாரம் & குழந்தையின் ஒத்துழைப்பு இவைகளுக்கு ஏற்பவே - முயற்சிகளை போட முடியும். அவ்வாறே ஒரு அரசும். 


6. சுனாமி வரலாம் என்று முன் ஊகம் செய்த இந்த நபர், சுனாமிக்குப் பிறகு தான் இருப்பாரா என்பதை இன்னமும் ஊகம் செய்யவில்லை. அதைப்பற்றி பேசவில்லை. ஏன் என்று தெரியவில்லை.


7.  கடந்த 2004 சுனாமியை தான் முன் ஊகம் செய்ததாகக் கூறுகிறார். 2004 சுனாமிக்கு முன்னும் பின்னும் கூட பல இயற்கை சீற்றங்கள் உலகில் ஏற்பட்டு உள்ளது, அவைகளுக்கெல்லாம் அவர் முன் ஊகம் கொடுக்கவில்லை. அதற்கான காரணங்களையும் அவர் பேசவும் இல்லை.


8. ஒரு புத்திசாலித்தனமான சமூக அமைப்பு என்றால் அங்கு,  எதிரிகளால் வரும் போர், இயற்கையால் வரும் சிறிய பெரிய பாதிப்புகள் இவைகளை ஏற்க, சந்திக்க ஒவ்வொரு குடும்பமும் தன் குழந்தைகளுக்கு சொல்லித்தரவேண்டும். இந்த சவால்களே இல்லாமல் ஒரு சமூகமும் கிடையாது. இருக்க முடியாது. ‘அதற்கு ஏற்பவே ஆசைக்கனவுகள்’ இருப்பது ஆரோக்கியம்.


9.கவனம்: கிறிஸ்தவ மிஷினரிகள் போன்ற பல வெளிநாட்டு சக்திகள் நமது நாட்டில் இப்படி ஒரு மரண பயத்தை அடிக்கடி ஏற்படுத்துவதையும் இங்கு நாம் கருத்தில்கொள்ளவேண்டி இருக்கிறது.

10. இது நமது கருத்து . பிழை இருப்பின் தெரிவித்து உதவ வேண்டுகிறேன். நன்றி.

0 comments:

Post a Comment