கடுகு எண்ணெய் [ MUSTARD OIL ] - ஆரோக்ய நண்பன் !

Leave a Comment
நாம் பெரும்பாலும் தினசரி சமையலுக்கு பயன்படுத்தும் கடுகில் மனிதனின் ஆரோக்கிய வாழ்க்கைக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளன.
  

கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம் போன்ற தாது உப்புக்களும் கடுகில் உள்ளது. கால்சியம் எலும்புகளின் உறுதிக்கும், மாங்கனீஸ் சிறந்த நோய் எதிர்பொருளாகவும், தாமிரம், ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும், இரும்பு செல்களின் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் ரத்த அணுக்கள் உற்பத்தியிலும் பங்கெடுக்கின்றன.

கடுகு எண்ணெயும் கூட கடைகளில் கிடைக்கிறது. ஆனால் ரீபைண்டு எண்ணெய் நல்லது இல்லை.

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் எண்ணெய்களுள் கடுகு எண்ணெயும் ஒன்று. பொதுவாக இந்த எண்ணெயை நல்ல சுவையான உணவுகள் சமைக்க பயன்படுத்தினால், நல்ல அருமையான சுவையை பெறலாம்.
கடுகு எண்ணெய்யில் ஆன்டி ஆக்ஸிடெண்ட் மற்றும் ஆன்டி பாக்டீரியல் அதிகம் இருக்கிறது.

கை கால் மூட்டு வலி வாயு பிடிப்பு ரத்தக்கட்டு போன்ற பிரச்சனைகளுக்கு கடுகு எண்ணெய்சிறந்த தீர்வு தரும்.

அதே சமயம் இதனை உடல் வலி இருக்கும் போது, உடலுக்குத் தடவி மசாஜ் செய்தால், உடல் வலியும் நீங்கும். மேலும் குளிர் காலங்களில் தினமும் காலையில் இந்த எண்ணெயை உடலில் பூசி குளித்து வந்தால், உடல் வெதுவெதுப்பாக இருப்பதோடு, மூட்டு வலிகளும் நீங்கும்.
இந்த எண்ணெய் உடலுக்கு மட்டுமின்றி, கூந்தல் மற்றும் சருமத்திற்கும் மிகவும் நல்லது.

எப்படியெனில் உடலில் உள்ள தேவையில்லாத இடங்களில் வளரும் முடியை நீக்க கடுகு எண்ணெயை தினமும் தடவி வந்தால், நீக்கலாம்.
கடுகு எண்ணெய் பெண்கள் தங்கள் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க உதவும், லேசாக சூடு படுத்தியபிறகு கடுகு எண்ணெயை முகத்தில் தடவி மசாஜ் செய்தால் விரைவில் மறைந்துவிடும் !

அதிலும் வறட்சியான சருமம் மற்றும் கூந்தல் இருந்தால், அதனைப் போக்குவதற்கு கடுகு எண்ணெய் சிறப்பானதாக இருக்கும்.
குறிப்பாக, கடுகு எண்ணெயில் கூந்தலில் ஏற்படும் பிரச்சனையைப் போக்குவதற்கான பொருள் அதிகம் உள்ளது. ஏனெனில் இதில் பீட்டா கரோட்டின் இருப்பதால், இதனை கூந்தலில் பயன்படுத்தும் போது, அவை வைட்டமின் ஏ ஆக மாற்றமடைந்து, கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும். 


கடுகு எண்ணெய்யுடன் நன்கு அரைத்த மஞ்சள் கலந்து முகத்தில் பூசிவந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறையும்.

கடுகு எண்ணெய் கடுகு எண்ணெயால் மசாஜ் செய்வது குழந்தைகளுக்கோ அல்லது பெரியவர்களுக்கோ பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.

இதில் வெப்பத்தை உண்டாக்கும் தன்மை உள்ளதால், குளிர் காலத்தில் மட்டுமே கடுகு எண்ணெய்யை உபயோகப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. கோடைக்காலத்தில் இதை பயன்படுத்தும் போது சருமத்தில் எரிச்சல் உண்டாகும்.

கடுகு எண்ணெய்யை மூட்டுவலிக்கு நல்ல மருந்து. சூடாக்கி பாதிக்கப்பட்ட மூட்டுக்களில் தடவி ஒத்தடம் கொடுக்க வலி குறையும்.

கடுகை அரைத்து முட்டிவலி மற்றும் ரத்தக்கட்டியின் மீதும், தலைவலி உள்ளவர்கள் நெற்றியில் பற்றுப் போட்டால் வலி நீங்கும்.

கடுகு எண்ணெயை குழந்தைகள் முதல் பெரியவர் வரை, உடலில் பூசி ஊரவைத்து குளிப்பது சருமத்திற்கு வனப்பளிக்கின்றது, மேலும் தலை முடி கொட்டுவதையும் தடுக்கிறது.

பொடுகுத் தொல்லையை நீக்குவதற்கு, கடுகு எண்ணெயில் சிறிது எலுமிச்சை சாற்றினை விட்டு கலந்து, ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்தால், தலையில் உள்ள பொடுகானது நீங்கிவிடும்.

கூந்தல் நன்கு பட்டுப் போன்றும், பொலிவோடும் இருப்பதற்கு, கடுகு எண்ணெயை தயிருடன் கலந்து, தலையில் தடவி, ஊற வைத்து குளிக்க வேண்டும். இதனால் கூந்தல் பொலிவோடு இருப்பது மட்டுமின்றி, கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

கடுகு அதிக கலோரி ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் கடுகில் 508 கலோரி ஆற்றல் கிடைக்கும். எளிதில் வளர்ச்சிதை மாற்றம் அடையும் நார்ச்சத்து உள்ளது. கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலும், உடல் பருமனை குறைக்கும் ஆற்றலும் கடுகிற்கு உண்டு.

கடுகு எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, கூந்தலில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, 30-45 நிமிடம் ஊற வைத்து, பின் குளித்தால், தலையில் இரத்த ஓட்டமானது சீராக இருப்பதோடு, கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும். மேலும் காய்ச்சல் அல்லது சளி இருந்தால், இரவில் படுக்கும் போதே எண்ணெயை தலையில் தடவி படுக்க வேண்டும். இதனால் உடலானது சற்று வெதுவெதுப்புடன் இருக்கும்.

கடுகு மற்றும் கடுகு எண்ணெய் ஆகிய இரண்டுமே ஆரோக்கியத்திற்கு சிறந்தது, எனவே சமையலுக்கு கூட நீங்கள் கடுகு எண்ணெய்யை பயன்படுத்தலாம்..
கடுகு எண்ணையில் சமைத்த பொருட்கள் சீக்கிரம் கெடுவதும் இல்லை.  
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கடுகு எண்ணெயின் வாசனை சற்று புதுமையாக இருக்கும், எனவே முதலில் வாரம் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் என்று கூட பழக்கத்தை துவக்கலாம்.   


0 comments:

Post a Comment