சொந்த அறிவை மதிக்கும் பள்ளிகள் வேண்டும்!

Leave a Comment
ஒரு மாணவன் பள்ளிப் புத்தகத்தில் உள்ளதைத் தவிர்த்த சொந்த பதிலைத் தந்தால் என்ன செய்வது என்று இன்னமும் ஆசிரியர்களுக்கும் தெரியவில்லை, பள்ளிக்கூடங்களுக்கும் தெரியவில்லை கல்வித்துறைக்கும் தெரியவில்லை, அரசுக்கும் தெரியவில்லை. 

நீதிமன்றத்திற்கு மட்டுமே தெரிந்திருக்கிறது - பதில் சரி என்றாலும் சட்டப்படி தவறு - என்று ! 

இது சுதந்திர பாரத தேசத்திற்கு அழகல்ல. நாம் இன்னமும் வெள்ளையனுக்கு அடிமை இல்லை. 

நம்மால் தேவைக்கு ஏற்ப நியாயமான கோரிக்கைகளை ஏற்க முடிய வேண்டும். எல்லா நீதிகளையும் என்றுமே எழுத்தில் கொண்டுவர முடியாது. அதற்கு மன சாட்சியுடன் தர்மத்துடன் சிந்திக்க வாழ பழக்குவதே தீர்வு. 

அது இல்லாத பக்ஷத்தில் எழுதப்பட்ட சட்டங்களுடன் மட்டுமே வாழவேண்டிய நிலை நீடித்தால், அது ஒரு அடிமை சமுதாயத்தை மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். சுதந்திரம் இருந்தாலும் கூட அந்த சமுதாயம் அடிமை வாழ்வையே விரும்புவதாக இருக்கும். 

பாரதம் போன்ற , அறிவிலும் நீதிகளிலும் மிக உன்னத நிலையில் வாழ்ந்த ஒரு நாட்டிற்கு இது அழகல்ல. 

 ஒரு மாணவனால் தேர்வுத்தாளில் எழுதப்பட்டுள்ள இந்த சர்ச்சைக்குள்ள இந்த பதிலை ஆராயவேண்டும்.....



கேள்வி;- எந்த போரில் திப்பு சுல்தான்உயிரிழந்தார்..?

பதில்;- அவரது கடைசி போரில்..!

கேள்வி;- இந்திய சுதந்திரத்திற்கான..பிரமாணம் எங்கே கையெழுத்திடப்பட்டது..?

பதில்;- காகிதத்தின் அடிப் பகுதியில்..!

கேள்வி;- சுப நிகழ்ச்சிகளில்..வாழை மரங்கள் எதற்காககட்டப்படுகிறது..?

பதில்;- அவைகள் கீழே விழாமல்இருப்பதற்காக.. கட்டப்படுகிறது..!

கேள்வி;- விவாகரத்திற்கான.. முக்கியகாரணம் என்ன..?

பதில்;- திருமணம் தான்..!

கேள்வி;- இரவு- பகல்..எவ்வாறு ஏற்படுகிறது..?

பதில்;- கிழக்கே உதித்த சூரியன்..மேற்கில் மறைவதாலும்.. மேற்கில்மறைந்த சூரியன் மீண்டும் கிழக்கில்..உதிப்பதாலும் இரவு- பகல் ஏற்படுகிறது..!

கேள்வி;- மகாத்மா காந்தி..எப்போது பிறந்தார்..?

பதில்;- அவரது பிறந்த நாளன்று..!

கேள்வி;- திருமணங்கள் சொர்க்கத்தில்நிச்சயிக்கப்படுகிறதா..?

பதில்;- இல்லை.. திருமணங்கள்செய்யும் அவரவர் வீட்டில்..!

கேள்வி;- தாஜ்மகால் யாருக்காக.. யார்கட்டினார்..?

பதில்;- சுற்றுலா பயணிகளுக்காக.. கொத்தனார்களால் கட்டப்பட்டது..!

கேள்வி;- 8மாம்பழங்களை.. 6பேருக்கு எப்படி சரியாகபிரித்து கொடுப்பது..?

பதில்;- ஜூஸ் போட்டு.. 6 டம்ளர்களில் சரியான அளவாக ஊற்றி கொடுக்கலாம்..!


மாணவனைப் பொருத்தவரை இந்த பதில் சரியாக இருப்பதாகவே நினைக்கிறான். அவனிடம் அதற்க்கான அறிவிப்பூர்வமான, அவன் மனம் சரியென்று சொல்லும் காரணங்கள் அவனிடம் இருக்கின்றன. 

நாம் எதிர்பார்க்கும் பதிலைத்தான் ஒரு மாணவன் சொல்ல வேண்டும் என்று நினைக்க முடியாது. அவனது பதிலில் தவறு இல்லாத பக்ஷத்தில் அது அங்கீகரிக்கப்படவேண்டும். அறிவாளித்தனமாக இருக்கும் பக்ஷத்தில் அது பாராட்டப்படவேண்டும். 

ஆனால் , இந்த பதிலை ஒரு மாணவன் எழுதினால் அவன் முட்டை மதிப்பெண் வழங்கப்படுகிறான். ஆசிரியர்களாலும் பெற்றோர்களாலும் குற்றவாளியாக ஆக்கப்படுகிறான். அவமதிக்கப்படுகிறான். 

ஆனால் இவர்கள் வளர்ந்தால் நாளை எதிர் பாராமல் வரும் சிரமங்களில் நல்ல தீர்வுகளைக் கண்பிடிக்கும் நிர்வாகிகளும் , தலைவர்களும் என்ற நிலைகளை அடைவார்கள். அதுதான் நாட்டுக்கும் தேவை. இவர்களால் உலகிற்கே நன்மைகளை செய்ய முடியும். இவர்களது சிறகுகள் வெட்டப்படக்கூடாது. 

ஏனெறால், ஒரு பெரிய நாடு , அல்லது உலக மனித சமுதாயம் சந்திக்கும் பிரச்சனைகள் எல்லாம் ஏற்கனவே புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளதுபோலவே இருக்கவேண்டும் - என்று அவசியம் எதுவும் இல்லை. 

இந்த சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்தி மாணவனை ஊக்குவிக்கத் தெரிந்த ஆசிரியர்கள் வேண்டும், பள்ளிக்கூடங்கள் வேண்டும், கல்வித் துறை வேண்டும், பெற்றோர்கள் வேண்டும், சமுதாயம் வேண்டும்.  

இந்த மாணவனின் மனம் காயமாகாமல் ஊக்குவிக்கத் தெரிந்த நீதி வேண்டும், சட்டம் வேண்டும், நீதிபதிகள் வேண்டும், நீதிமன்றம் வேண்டும். 

அவர்களால்தான் ஒரு சுதந்திர பாரதத்தை உண்மையில் அமைக்க முடியும். 

அப்படி ஒரு அரசாங்கத்தை நிர்வாகத்தைக் கொண்டுவர முடியுமா - என்றால் கொண்டுவர முடியவேண்டும். அதை நோக்கிமட்டுமே நாட்டுப் பற்று உள்ளவர்கள் பயணம் செய்ய வேண்டும்!


0 comments:

Post a Comment