வேதம் ஏன் சார் ? குருஜீ ஏன் சார் ? டைம் வேஸ்ட் ?

Leave a Comment
இது இன்றைய முக்கிய சந்தேகமாக இருக்கிறது நம் குழந்தைகளுக்கு. அவர்களைப் பொருத்தவரை அது நியாயமான கேள்வியே . அதனால் அது பதில் அளிக்கப்பட வேண்டும். 


நம் சரித்திரத்தில் ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 

முன்பு, யாரோ ஒரு சாமியார் யாரோ கிடைத்தவருக்கு உபதேசம் செய்யும் வழக்கம்  இருந்தது இல்லை 

அப்பா பையனுக்கோ , தாத்தா பேரனுக்கோ வேத உபதேசங்களை சொல்லித்தந்தார். அப்படி சொல்லித்தர ஒருவர் அந்த விதத்தில் அமையாத பக்ஷத்தில்  அந்த அளவுக்கு முக்கிய உறவில் இருந்தவர்களே சொல்லித் தந்தனர். 

தனது குழந்தைகளுக்கு யாரும் தீங்கு தருவதையோ , ஏமாற்றும் பேச்சையோ பயன் தராததையோ 12 ஆண்டுகள் உட்கார்ந்துகொண்டு சொல்லித்தர மாட்டார்களே. இப்படித்தான் முன்பு குருகுலங்கள் தத்தமது வம்சத்தாருக்கே  நடந்து  வந்தன . 


:(       'ஆகட்டும், அன்று பயன் தந்த விஷயம் இன்று பலன் தரவாய்ப்பு இல்லாமல் இருக்கிறதே , அதனால் அது கஷ்டப்பட்டு கற்று இன்று பயன் தராவிட்டால் கால விரயம்தானே? பயன் தரும் என்பதெல்லாம் வெறும் நம்பிக்கைதான்! '

:)      அது சரி, அது பயனைத் தராது என்றும் நீ ஒன்றும் முறையாக நிரூபிக்கவில்லையே. நீ சொல்லும் 'பயனைத் தராது' என்னும் வாதமும் 'வெறும் நம்பிக்கை'தானே ! அதனால் புரிந்துகொள்ளவும்....

இடையில்  நம் சரித்திரத்தில்....

1. வெளிநாட்டுப் படையெடுப்புகளின் காரணமாக பல நேரங்களில் இந்த கல்வி அமைப்புகள் உயிருக்கு பயந்து ஓட வேண்டிய சூழ்நிலையினால் சிதறின,  
2. சற்று நீண்ட கால அந்நிய ஆட்சியில் - இவைகளை நடத்தினால் கொலை செய்துவிடுவார்,... போன்ற  காரணங்களால் , 
3. வெள்ளையர்களின் காலத்தில் கொடுக்கப்பட்ட அவர்களுக்கான வேலையாட்களை உருவாக்கும் [இன்று வரையுள்ள] மாற்றுக் கல்வி வளர்ந்ததால் ..... 
இது போன்ற காரணங்களால் தொடர்ந்து வந்த குருகுலக் கல்வி முறை நசிந்தது. 

அதனால் படிக்க வரவும் ஆள் இல்லை, சொல்லித் தரவும் ஆள் இல்லை - என்ற நிலை வந்துவிட்டது. அதிலும் எப்படியோ பிழைத்துக் கிடந்த யாரோ ஒரு குருவிடம் , யாரோ ஒரு மாணவன் கற்கும் இன்றைய நிலை வரத் துவங்கியது .

யார்  மூலமாகக் கற்றாலும், தொடர்ந்து வரும் கல்வி என்றால் , இடையில் உருக் குலையாதது என்றால், பயனைக் கொடுத்துதானே தீரவேண்டும் . 

:(      அது சரி இடையில் உருக்குலைந்து போயிருந்தால்?

:(      வேதக் கல்வி உருக் குலையமுடியாதபடி , அதற்கு உள்ளேயே கட்டமைப்பை உடையதாக இருக்கிறது. ஆனால் அந்தப் பாரம்பர்யக் கல்வியைத் தருபவரைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியது மாணவனின் கடமைதான். 

:(     ஆன்மீகம் என்ற பெயரில் நிறையவே உலா வருகின்றனவே ?

இங்கே சொல்லப்பட்டவைகள் வேதக்  கல்வியைப் பற்றிதானே தவிர ஆன்மீகம் என்பதைப் பற்றி . கிடையாது . வேதத்தின் பேச்சு நாம்  ஆன்மீகம் என்பதற்கும் மேல் மிகப் பரந்த பகுதிகளை உள்ளடக்கியது .

அதனால் நாம் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது - 

1. ஒருவேளை வேதத்தின் பேச்சு மனித சமுதாயத்திற்கு 'இன்றும் என்றும் நன்மை செய்வதும் அவசியமானதும்' என்று உண்மை நிலை இருந்தால், அது எப்படி , ஏன் என்று அறியப்பட வேண்டும்.

2. அவைகளை மீட்டு கற்று காப்பாற்றி உலகிற்குக் கொடுக்க வேண்டும் 

3. அதற்காகவாவது அவைகளை நாம் கற்க வேண்டும் 


 எல்லோரும் இன்புற்று  இருப்பதற்கு அன்றி 
வேறு ஒன்றும் அறியாத பரம்பரை ஆயிற்றே நம்முடையது ! 






0 comments:

Post a Comment