புரளி பேசினால் பாபம் வரும் !

Leave a Comment
ஒரு நாட்டில் ஒரு மன்னன் இருந்தான். அவன் பலருக்கும் தானமளிப்பதில் பெரும் விருப்பமுடைய நல்ல மன்னன். குறிப்பாக பிராமணர்களுக்குஅன்னதானம் செய்வதில் பெரும் விருப்பமுடையவன். தினந்தோறும் அதை மேற்கொள்பவன்!!

ஒரு நாள் அதே போல அவன் அன்னதானம் செய்து கொண்டிருந்தான்.அவன் செய்து கொண்டிருந்த இடத்துக்கு மேலே ஒரு கழுகு ஒரு பாம்பைக் கொன்று தன் அலகில் பிடித்தவாறு பறந்து கொண்டிருந்தது!! மன்னன் உணவளிக்கும் பாத்திரத்தைக் கடந்த நேரத்தில் கழுகின் அலகிலிருந்த செத்த பாம்பின் வாயிலிருந்து ஒரு துளி கடுமையான விஷம் அந்தப் பாத்திரத்தில் இருந்த உணவுக்குள் விழுந்தது!! சரியாக அந்த விஷம் இருந்த உணவைப் பெற்று உண்ட ஒரு பிராமணன் அதனால் இறந்து போனான்.

இறந்த பிராமணன் யமலோகத்தில் சித்திரகுப்தன் முன்பு கொண்டு செல்லப்பட்டான். சித்திரகுப்தனுக்கு அந்த அந்தணன் இறந்ததற்கான கர்மவினையை யார் மேல் சுமத்தி அதற்கான தண்டனையை வழங்குவது என்று புரியவில்லை! பாம்பின் மேல் குற்றமில்லை ஏனென்றால் அது இறந்து போயிருந்தது. கழுகின் மேல் குற்றமில்லை ஏனென்றால் அது தன் உணவைத்தான் சுமந்து கொண்டு பறந்து கொண்டிருந்தது. 

சரி அடுத்தது மன்னன். மன்னன் தானம் கொடுக்கும் புண்ணிய மனம் படைத்தவன்! அவன் உணவில் விஷம் கலந்தது தெரியாமல்தானே அதை அந்தணனுக்கு வழங்கினான். அப்படியானால் அந்தப் பாபம் மன்னனை எப்படி சேரும்??

குழம்பிப் போன சித்திரகுப்தன் யமதர்மனிடம் சென்று தன் சந்தேகத்தை கேட்டான். யமதர்மனும் கொஞ்சம் யோசனையில் ஆழ்ந்தான். அதன் பின் "சித்திரகுப்தா இதைப் பற்றி நீ பெரிதாக எண்ணாதே ! இந்தக் கர்ம வினையின் தண்டனையை யாருக்கு வழங்கவேண்டுமென்று சிறிது காலத்தில் தானாகவே உனக்குத் தெரிய வரும்" என்றான்!! சரி என்று சித்திரகுப்தனும் திரும்பினான்.

அதே நாடு, நான்கு அந்தணர்கள் அரண்மனையைத் தேடி வந்து கொண்டிருந்தனர். வழி தெரியாமல் தேடினர். அங்கு பானை விற்றுக்கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் அரண்மனைக்கு செல்லும் வழியைக் கேட்டனர். அந்தப் பெண்ணும் சரியான வழியை விரலைநீட்டிக் காட்டினாள். அத்துடன் விட்டிருந்தால் பரவாயில்லை ! அவள் அந்த அந்தணர்களிடம் " கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். இந்த மன்னன் அந்தணர்களை சாகடிப்பது போலத் தெரிகிறது" என்றும் சொன்னாள் !!

அந்தக் காட்சியைக் கண்ட சித்திரகுப்தன் தன் சந்தேகத்துக்கு விடை கிடைத்து விட்டதென்று மகிழ்ந்து அந்த பானை விற்கும் பெண் மேல் அந்த பாபத்தை ஏற்றி விட்டான். 


ஏன் அப்படி? 

தவறு இல்லாதவரைப் பற்றி தவறாகப் பேசினால், அவரது முயற்சி இன்றி உண்டான பாபம், அந்த தவறு இல்லாதவரைக் குறை பெசியவனுக்கே போய் சேரும்!  

பழிவாங்கும் மனம் இருப்பவனை அழிக்கும்...

1 comment
உங்களுக்கு பிடிக்காதவங்கள 
பழி வாங்கும் உணர்வு எழுகிறதா?













இந்த கதைய அவசியம் படிங்க.!

“நினைத்துப் பார்த்தால் நெஞ்சு கொதிக்கிறது சாமீ. எத்தனை பேர் என்னை கேலி   செய்திருக்கிறார்கள்? எத்தனை பேர் வசை பாடியிருக்கிறார்கள்? 

எத்தனை பேர் என் முதுகில் குத்தியிருக்கிறார்கள்? அவர்கள் ஒவ்வொருவரையும் பழி 
வாங்காமல் ஓயமாட்டேன்” என்று 
 அந்த சாமியார் முன் வந்து பொருமினான் ஒரு சீடன். 

“ஏதாவது மந்திரம் கிந்திரம் இருந்தா சொல்லுங்க சாமி” என்றான். 

சாமி யோசித்தார். 

“சரி… ஒன்று செய்யலாம்” என்று கோணிப்பையை சீடன் கையில் கொடுத்தார் சாமி. 
“நீ யாரையெல்லாம் பழி வாங்கவேண்டும் என நினைக்கிறாயோ, அவர்கள் பெயரை ஒரு  உருளைக்கிழங்கில் செதுக்கி இந்த கோணிப்பையில் போட்டுக்கொண்டே வா” என்றார். 

“ஆனால் இரண்டு நிபந்தனைகள்” என்று தொடர்ந்தார்…. “ஒரு உருளைக்கிழங்கில் இரண்டு  மூன்று பெயர்களை செதுக்கக்கூடாது. ஒவ்வொரு பெயரையும் தனித்தனியாய் செதுக்க  வேண்டும்”. 

“சரி… அப்புறம்?” 

“நீ எங்கெல்லாம் போகிறாயோ அங்கெல்லாம் இந்த கோணியை தூக்கி கொண்டு போகவேண்டும்”.. 

“ப்பூ, இவ்வளவுதானா? நான் என்னமோ பெரிசா ஏதோ சொல்லப்போறீங்கன்னு நினைச்சேன்” 
என்று சீடன் எழுந்து போனான். 

அன்றிலிருந்து யார் மீதெல்லாம் ஆத்திரமோ யார் யாரை பழிவாங்க வேண்டும் என்று நினைப்பு வருகிறதோ, அப்போதெல்லாம் ஒரு உருளைக்கிழங்கை எடுத்து பெயரை செதுக்கி கோணிப்பையில் போட்டுக்கொண்டே வந்தான். 

ஆரம்பத்தில் கோணியை தூக்கி கொண்டு திரிவது ஒன்று பெரிய சிரமமாய் தெரியவில்லை. 
ஆனால் நாளாக .....நாளாக, அது சுமையாக தோன்றியது. இன்னும் கொஞ்சநாள் போனதும் தூக்குவதே சிரமமாகிவிட்டது. 

இதனிடையே சில நாட்களுக்கு பின் அந்த உரித்த உருளைக்கிழங்குகளிலிருந்து வாசனை வர ஆரம்பித்தது. நாள் போக போக அது சகிக்க முடியாத அழுகிய நாற்றமாக வீச ஆரம்பித்தது. 

அவன் மூட்டையை தூக்கி கொண்டு வந்தாலே, எல்லோரும் – நெருங்கிய நண்பர்கள், கட்டிய மனைவி, பெற்ற பிள்ளைகள் என எல்லோரும் ஓட ஆரம்பித்தார்கள். 

அவனிடம் பேசவோ, அவன் சொல்வதை யாரும் காதுகொடுத்து கேட்கவோ கூட தயாராக இல்லை. 
சீடன் மறுபடியும் சாமியிடம் வந்தான். 

“என்ன சாமி இப்படிப் பண்ணிட்டீங்களே..?” என்றான்.

“என்ன புரிந்தது?” என்றார் சாமி. 

“பழி வாங்கும் குரோத உணர்வை சேகரித்துக்கொண்டே வந்தால் அது சுமையாகிவிடும். 
துர்நாற்றம் வீசும். யாரும் பக்கத்தில் வரமாட்டார்கள். அதை எனக்கு விலக்கத்தானே இப்படி செய்தீர்கள்?” என்றான் சீடன். 

“ம்… சரி. ஆனால் நீ இன்னும் முழுக்கிணற்றை தாண்டவில்லை” என்றார் சாமி. 

“புரியலையே…?” 

“உன் பிரச்னை சுமை கூடி போச்சே என்பதும் நாற்றமடிக்கிறதே என்பதும் தான் என நீ நினைக்கிறாய், இல்லையா?” 

“ஆமாம்” 

“சரி… அந்த உருளைக்கிழங்குகளை அவ்வப்போது கொட்டி அந்த கோணியை காலி செய்து கொண்டே வந்தால் இந்த சுமைப் பிரச்னை, நாற்றப் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று நினைக்கிறாய் இல்லையா?” 

“ஆமாம்.” 

“மகனே, பிரச்சனை உருளைக்கிழங்கில் இல்லை. கோணிப்பை. ?!
கோணி இருப்பதால் தானே அதில் 
உருளைகிழங்கை சேர்க்க ஆரம்பித்தாய்? 

எனவே, 

உனக்கு சுமையில்லாமல் இருக்க வேண்டுமானால், அந்த சுமை நாற்றமெடுக்காமல் இருக்க 
வேண்டுமானால் கோணியை முதலில் தூக்கி எறி. 

உனக்கு துன்பம் இழைத்தவர்கள் தண்டனை பெற்றே தீருவார்கள்.. நீ உன் வேலையில் கவனம் செலுத்தி உன் கடமையை சரியாக செய்து வா.”..என்றார்.. 

ஆம்,நண்பர்களே.. 

கைவிடவேண்டியது பழி வாங்கும் நினைப்பை மட்டுமல்ல, பழி வாங்கும் மனதையும் கூடத்தான்... 

"மறக்க வேண்டியவைகளை மறக்காமல் நினைத்திருப்பதும்........
மறக்க வேண்டாதவகைகளை மறந்துவிடுவதும்தான் ".

இந்த உலகத்தின் இன்றைய துன்பங்களுக்கு எல்லாம் காரணம்.

உழவும் பசுவும் அழிந்த கதை!

Leave a Comment
ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆக்கிரமித்த பின் இங்குள்ளவை பற்றி அவர்கள் ஆச்சரியப்பட்ட விஷயங்கள் இரண்டு. ஒன்று குருகுலக்கல்வி,மற்றொன்று நமது பாரம்பரிய விவசாயம்.
அப்போதைய பிரிட்டிஷ் இந்திய கவர்னரான ராபர்ட் கிளைவ் நம் விவசாய முறையைப் பற்றி நீண்ட விரிவான ஆய்வு செய்தார். இந்திய விவசாய முறை பிரிட்டிஷாரைச் சார்ந்திருக்கவும் அவர்களுக்குச் சாதகமாகவும் மாற்ற நினைத்தார்.

அவருடைய ஆய்வின்படி, இந்தியக் கால்நடைகள், குறிப்பாக, பசுக்கள்தான் நமது விவசாயத்தின் முதுகெலும்பு. பசுக்கள் இல்லை என்றால் இந்திய விவசாயம் அழியும்.

இப்பசுக்களை அழித்துவிட்டால்விவசாயம் அழிவுப்பாதையை நோக்கித் திரும்பும். அதன் மூலம் ரசாயன உரங்களுக்காகவும், பூச்சிக்கொல்லி மருந்துகளுக்காகவும், ஆங்கிலேயர்களைச் சார்ந்திருக்கும் நிலை ஏற்படும் என உணர்ந்தார்.

நமது பசுக்களின் சாணம் நல்ல சத்தான உரமாகவும், அவற்றின் சிறுநீர் சிறந்த பூச்சிக்கொல்லியாகவும் காலம்காலமாக நம்மால் பயன்படுத்தப்பட்டு வந்தது. பசுக்கள் அழிந்தால் இந்தியர்கள், உரத்துக்கும், பூச்சிக்கொல்லி மருந்துக்கும் ஆங்கிலேயரைச் சார்ந்து நிற்கும் நிலை உருவாகும் என முடிவு செய்தார். இப்படித்தான் ஆங்கிலேய நாட்டின் உரங்கள் இங்கு நுழைந்தன.

நமது பசுக்களின் சாணத்தையும், சிறுநீரையும் பயன்படுத்தி ஒரு ஏக்கருக்கு 54 குவிண்டால் அளவுக்குச் சத்தான அரிசியை நாம் உற்பத்தி செய்தோம். இதை அறிந்து, 1760-இல் ராபர்ட் கிளைவ், பசுக்களை கொல்லப் பசுவதைக் கூடங்களை (ஸ்லாட்டர் ஹவுஸ்) இந்தியாவில் நிறுவினார். நாளொன்றுக்கு 30 ஆயிரம் பசுக்கள் வீதம் ஒரு ஆண்டில் ஒரு கோடிப் பசுக்களைக் கொன்றார்.

அவர் இந்தியாவை விட்டுச் செல்வதற்கு முன் இதேபோல பல கூடங்களை நிறுவினார். இதன் மூலம் லட்சக்கணக்கான பசுக்கள் உணவுக்காகக் கொல்லப்பட்டன. அக்காலத்தில் பெரும்பாலான பகுதிகளில் நம் மக்கள்தொகையைவிட, பசுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

இதன் மூலம் உணவுதானிய உற்பத்தி தடையின்றி நடந்தது. 1910-ஆம் ஆண்டு நம் நாட்டில் 350 பசுவதைக்கூடங்கள் இரவும், பகலும் இயங்கின. பசுக்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்ததும் நாம் ரசாயன உரத்துக்கு அவர்கள் வாசலை நாடிய நிலை உருவானது. இதன் மூலம் யூரியாவும், பாஸ்பேட் உரங்களும் உள்ளே நுழைந்தன.

நம் நாடு சுதந்திரம் அடைந்தபின் பசுமைப்புரட்சி என்ற பெயரில் பெருமளவு ரசாயன உரங்களைப் பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்கினோம். அதன் பக்கவிளைவுகளை இன்று அனுபவிக்கிறோம்.

ஒருமுறை நிருபர் ஒருவர் இந்த பசுவதைக் கூடங்கள் பற்றி மகாத்மா காந்திஜியிடம் கேட்டபோது, “இந்தியா சுதந்திரம் அடையும் நாளில் அனைத்து பசுவதைக் கூடங்களும் மூடப்படும்’ என்றார்.

1929-ஆம் ஆண்டு நேரு ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில், “நான் இந்தியாவின் பிரதமரானால் இங்குள்ள பசுவதைக் கூடங்களை மூடுவதே என்னுடைய முதல் வேலையாக இருக்கும்’ என்றார்.

இதில் மிகப்பெரிய சோகம் என்னவென்றால் 1947-க்கு பின் 350 பசுவதைக்கூடங்கள் என்ற நிலையில் இருந்து, 36 ஆயிரம் பசுவதைக்கூடங்கள் என்ற நிலைக்கு இப்போது முன்னேறிவிட்டோம்.

இன்று அதிநவீன இயந்திரங்களால் ஆன வதைக்கூடங்கள் நிறுவப்பட்டு, ஒரு மணி நேரத்தில் பத்தாயிரம் பசுக்கள் என்ற அளவில் வதை செய்யும் திறனுடன் இரவும், பகலும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

சாப்பாட்டுக் கறிக்காகவும், தோலுக்காகவும் லட்சக்கணக்கான பசுக்கள் கொடூரமாகக் கொல்லப்படுகின்றன. தில்லியில் மட்டும் 11 ஆயிரம் பசுவதைக் கூடங்கள் சட்டத்துக்குப் புறம்பாக இயங்குகின்றன, இங்கு மட்டும் நாளொன்றுக்கு இரண்டு லட்சம் பசுக்கள் கொல்லப்படுகின்றன.

நமது நாட்டுப் பசுக்களின் இனமே கருவறுக்கப்படும் சூழல் நடந்து கொண்டிருக்கிறது. நமது பாரம்பரிய கால்நடைகள் நல்ல உடல் சக்தியுடன் நோய் எதிர்ப்புத் திறன், வெயிலைத் தாங்கும் சக்தி பெற்றவை. மாபியா கும்பல், அவர்களுடைய லாரி, டிரக்குகளில் நூற்றுக்கணக்கானபசுக்களைச் சந்தைகளில் வாங்கி, வதைக்கூடங்களுக்கு அனுப்பி வருகிறது.

இதற்கு போலீஸ் துறையும் உடந்தையாகச் செயல்படுகிறது. வடமாநிலங்களில் துப்பாக்கி முனையில் கால்நடைகள் கிராம மக்களிடமிருந்துபறித்துச் செல்லப்படுகின்றன.

விவசாயம் அழிந்து தொழிற்சாலைகளும், நகரமயமாதலும் பெருகி வருகிறது. பெரும்பாலான விவசாய நிலங்கள் பிளாட்டுகளாகவும், வர்த்தகக் கேந்திரங்களாகவும் உருமாறிவிட்டன.
கால்நடைகளுக்கு பசுந்தீவனம், வைக்கோல் குறைந்துகொண்டே வருகிறது. மேய்ச்சல் நிலமும் மறைந்து கொண்டே வருகிறது. முந்தைய ஆட்சியில் நிலமற்ற விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் திட்டத்தில் இருந்த புறம்போக்கு நிலங்களும் மறைந்துவிட்டன.

விளைநிலம் குறைந்தால் என்ன? குறைந்த நிலம், அதிக மகசூல் என்ற நோக்கில் அறிவியலார்கள் உள்ளனர். உணவுப்பொருள்களைவிளைவிப்பதைவிட, இறக்குமதி செய்து கொள்வது எளிது என அரசியல்வாதிகள் கூறுகின்றனர்.

இதன் பாதிப்புகளை அனுபவிக்கப்போவது வருங்கால சந்ததிகள்தான். அறிவியலார்கள் மற்றும்
பிராணிகள் நல அமைப்பினர்களின்புள்ளிவிவரப்படி நம் நாட்டில் உள்ள 72 மில்லியன் (ஒரு மில்லியன் என்றால் பத்து லட்சம்) உழவு மற்றும் வண்டி மாடுகள், 27 மில்லியன் மெகாவாட் சக்தி அளவுக்கு உடல் உழைப்பை நமக்குக் கொடையாக அளிக்கின்றன.

இந்த உழைப்பின் மூலம், அதே அளவு சக்தியை உற்பத்தி செய்ய நிலக்கரி மற்றும் மற்ற மூலப்பொருள்களைச் சேமிக்கின்றன.

இக்கால்நடைகளால் ஓராண்டுக்கு 100 மில்லியன் டன் காய்ந்த சாணம் நமக்குக் கிடைக்கிறது. இதன் மதிப்பு 20 ஆயிரம் கோடி ரூபாய்.

இச்சாணம் கிடைப்பதால் 50 மில்லியன் டன் விறகு சேமிக்கப்படுகிறது. இதனால் மரங்கள் அதிக அளவுக்கு வெட்டப்படாமல் தவிர்க்கப்படுவதுடன், இயற்கைச் சூழலும் பாதுகாக்கப்படுகிறது.

இந்த 73 மில்லியன் கால்நடைகளும் கறிக்காகவோ, தோலுக்காகவோ கொல்லப்பட்டால் நமக்கு 7.3 மில்லியன் டிராக்டர்கள் தேவைப்படும். இதற்கு 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு தேவைப்படும்.

அவற்றை இயக்குவதற்கு 2 கோடியே 37 லட்சத்து 50 ஆயிரம் டன் டீசல் தேவைப்படும். இதன் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய். இந்த அளவு டீசலைப் பயன்படுத்துவதால் காற்று மாசுபாடு மற்றும் புவி வெப்பமயமாதல் அதிகரிக்கும்.

இயற்கை நமக்குத் தந்த செல்வங்களான, கால்நடைகளைக் கொல்வதன் மூலம் நாம் எவ்வளவு விலையை தந்து கொண்டிருக்கிறோம் என்பதை சிந்திக்கும் ஆற்றல் பெற்றோர் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இன்று ரசாயன உர இறக்குமதிக்காக கோடிக்கணக்கான ரூபாயை பன்னாட்டு கம்பெனிகளுக்கு கொட்டிக் கொடுக்கிறோம். அது மட்டுமன்றி பால் மற்றும் பசு சார்ந்த பொருள்களையும் இறக்குமதி செய்கிறோம்.

ஒரு நவீன மாடு வதைக் கூடத்திற்கு அதைச் சுத்தம் செய்ய தண்ணீர் அளவு ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் லிட்டர். இது பல லட்சம் மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் தண்ணீர் தட்டுப்பாடும் எரிசக்தி தட்டுப்பாடும் உள்ள நம் நாட்டில் இயற்கையின் கொடையாகக் கிடைத்த இந்த கால்நடைச் செல்வங்களைக் கொல்வதை இனிமேலும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமா?

திதி- என்றால் என்ன?

Leave a Comment
சந்திரனின் சஞ்சாரத்தை அடிப்படையாகக் கொண்டது - திதி

சாந்திர மாதம்; 29 நாள் 12 மணி 44 நிமிடங்கள் கொண்டது ஒரு சாந்திர மாதம் (Lunar Month).

சாந்திர வருடம்; இப்படி பன்னிரண்டு சாந்திர மாதங்கள் கொண்டது ஒரு சாந்திர வருடம் (Lunar year).

இது 354 நாட்கள் கொண்டது. ஒரு சாந்திர மாதத்தின் இருபத்து ஒன்பதரை நாட்கள் சொச்சத்துக்குள் முப்பது திதிகள் அடங்கி நிற்கும்.

கிருஷ்ண பட்சம்; சந்திரன் பூமியைச்சுற்றி வரும்பொழுது அது தேய்ந்து வருகின்ற காலம் தேய்பிறைக் காலமாகும். இது அமாவாசையில் (New Moon) முடிவுறும். இதை கிருஷ்ண பட்சம் என்பர்.

சுக்ல பட்சம்; சந்திரன் பூமியைச்சுற்றி வரும்பொழுது அது வளர்ந்து வருகின்ற காலம் வளர்பிறைக் காலமாகும். இது பௌர்ணமி என்னும் முழுநிலவில் முடிவுறும். இதை சுக்ல பட்சம் என்பர்.

வளர் பிறைக்காலத்தில் பதினைந்து திதிகளும், தேய்பிறைக்காலத்தில் பதினைந்து திதிகளும் வருகின்றன. இந்தப்பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை அமாவாசையும் பௌர்ணமியும் மாதமொரு முறை மாறி மாறி வந்து போகின்றன.

. அமாவாசை - நிலவில்லாத நாள். இன்று நிலவுக்கு ஒரு கலை.

1. பிரதமை - முதாலம் பிறை. இன்று நிலவுக்கு இரண்டு கலைகள் உள்ளன.
2. துதியை - இரண்டாம் பிறை. இன்று நிலவுக்கு மூன்று கலைகள். துவி என்பது இரண்டு என்று பொருள் படும். ஆங்கிலத்தில் இரண்டைக் குறிக்கும் 'one' என்ற சொல்லும் இதிலிருந்ந்தே வந்தது. இதில் இருந்துதான் துவிச்சக்கர வண்டி, துவைதம் போன்ற சொற்கள் வந்தன. அத்துவைதம் என்றால் இரண்டு அல்லாதது என்று பொருள்.
3. திருதியை- மூன்றாம் பிறை. இன்று நிலவுக்கு நான்கு கலைகள். திரி என்ற சொல் மூன்று என்று பொருள்படும். ஆங்கிலத்தில் மூன்றைக் குறிக்கும் 'Three' என்ற சொல் இதில் இருந்துதான் வந்தது. திரிபுரம் என்பது முப்புரங்களான மூன்று நகரங்களைக் குறிக்கும். திரிநேத்ரன் என்றால் முக்கண்ணன் என்று சிவனைக் குறிக்கும்.
4. சதுர்த்தி- நாலாம் பிறை. இன்று நிலவுக்கு ஐந்து கலைகள். சதுர் என்றால் நான்கு என்று பொருள். சதுரம் என்றால் நான்கு பக்கங்கள் உள்ளது என்று பொருள். சதுர்முகன் என்றால் நான்கு முகங்களை உடைய பிரம்மாவைக் குறிக்கும். 'சுக்லாம் பரதரம்' என்ற பிள்ளையார் மந்திரத்தில் வருகின்ற சதுர்ப்புஜம் என்பது பிள்ளையாரின் நான்கு தோள்களைக் குறிக்கும். சதுர்யுகம் என்பது கிருதயுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என்ற நான்கு யுகங்களினதும் கூட்டாகும்.
5. பஞ்சமி-ஐந்தாம் பிறை. இன்று நிலவுக்கு ஆறு கலைகள். பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள். ஆங்கிலத்தில் ஐந்தைக் குறிக்கும் 'five' என்ற சொல் இதிலிருந்துதான் வந்தது. பஞ்சாட்சரம் என்பது சைவத்தின் ந-ம-சி-வா-ய என்ற ஐந்து எழுத்து மந்திரத்தைக் குறிக்கும். பஞ்ச பூதங்கள் என்பது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து பௌதிகப் பேரலகுகளைக குறிக்கும். பஞ்சாங்கம் என்பது ஒவ்வொரு நாளுக்கும் உரிய வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்து அங்கங்களை உடைய வானியல் கணிப்பைக் குறிக்கும்.
6. ஷஷ்டி-ஆறாம் பிறை. இன்று நிலவுக்கு ஏழு கலைகள். ஷ என்றால் ஆறு என்று பொருள். ஆங்கிலத்தில் ஆறு என்ற எண்ணைக் குறிக்கும் 'six' என்ற சொல் இதிலிருந்துதான் வந்தது.ஷண்முகன் என்பது ஆறு முகங்களுடைய முருகனைக் குறிக்கும். ஷடாட்சரம் என்பது முருகனின் ச-ர-வ-ண-ப-வ என்ற ஆறு எழுத்து மந்திரமாகும்..
7. ஸப்தமி-ஏழாம் பிறை. இன்று நிலவுக்கு எட்டு கலைகள். ஸப்த என்றால் ஏழு என்று பொருள். ஆங்கிலத்தில் ஏழைக் குறிக்கும் 'seven' என்ற சொல் இதிலிருந்துதான் வந்தது. ஸப்த ரிஷிகள் என்பது ஏழு முனிவர்களைக் குறிக்கும்.
8. அட்டமி-எட்டாம் பிறை. இன்று நிலவுக்கு ஒன்பது கலைகள். ஆங்கிலத்தில் எட்டு என்னும் எண்ணைக் குறிக்கும் 'Eight'என்ற சொல் இதிலிருந்தே வந்தது. அட்டம் என்றால் எட்டு என்று பொருள். அட்டலட்சுமி என்றால் எட்டு இலட்சுமிகளைக் குறிக்கும். அட்ட திக்குகள் என்றால் கிழக்கு, தென் கிழக்கு, தெற்கு, தென் மேற்கு, மேற்கு, வட மேற்கு, வடக்கு, வடகிழக்கு என்னும் எட்டுத் திக்குகளைக் குறிக்கும். அட்டதிக்குப் பாலகர்கள் என்றால் முறையே இந்த எட்டு திக்குகளுக்கும் உரிய இந்திரன். அக்கினி, இயமன், நிருதன், வருணன், வாயு, குபேரன், ஈசானன் எட்டு திக்குத்தெய்வங்களையும் குறிக்கும். ' அருணன் இந்திரன் திசை அணுகினான்' என்றால் சூரியனின் சாரதியாகிய அருணன் இந்திரனுக்குரிய கிழக்குத் திசையை அணுகினான் என்று பொருள். இந்த வரி திருவாசகத்தின் திருப்பள்ளி எழுச்சியில் வருகின்றது.
9. நவமி- ஒன்பாதம் பிறை. நிலவுக்கு பத்து கலைகள். நவம் என்றால் ஒன்பது. ஆங்கிலத்தில் ஒன்பதைக் குறிக்கும் 'Nine' என்ற சொல் இதிலிருந்துதான் வந்தது. நவராத்திரி என்றால் ஒன்பது இரவுகளைக்குறிக்கும். நவதானியம் என்றால் ஒன்பது தானியங்களைக் குறிக்கும். நவக்கிரகம் என்பது ஒன்பது கிரகங்களைக் குறிக்கும்.
10. தசமி- பத்தாம் பிறை. இன்று நிலவுக்கு பதினொரு கலைகள். தசம் என்றால் பத்து. கணிதத்தில் தசமத்தை அறிமுகப்படுத்தியவர்கள் இந்துக்களே. இதை ஆங்கிலத்தில் Decimal என்று கூறுகிறார்கள். தசகாரியம் என்பது ஆத்மீகப்பாதையிலுள்ள பத்துப்படிநிலைகளைக் குறிக்கும். தசரா என்று நமது நவராத்திரியை வட இந்தியாவில் பத்து நாட் கொண்டாட்டமாகக் கொண்டாடுவர். 'தக்க தசமதி தாயொடு தான்படும் துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்' - திருவாசகம். இங்கு தசமதி என்பது பத்து மாதங்கள். இது தாயின் வயிற்றில் நாம் இருந்த காலத்தைக் குறிக்கின்றது.
11. ஏகாதசி- பதினோராம் பிறை. இன்று நிலவுக்கு பன்னிரண்டு கலைகள். தசம் என்றால் பத்து என்று பார்த்தோம். ஏகம் என்றால் ஒன்று. ஏகாதசி என்றால் பத்தும் ஒன்றும் சேர்ந்த பதினொன்று.
12. துவாதசி- பன்னிரண்டாம் பிறை. இன்று நிலவுக்கு பதின்மூன்று கலைகள். துவி என்றால் இரண்டு என்று பார்த்தோம். தசம் என்றால் பத்து என்று பார்த்தோம். துவாதசி என்பது பத்தும் இரண்டும் சேர்ந்த பன்னிரண்டைக் குறிக்கும்.
13. திரயோதசி-பதின்மூன்றாம் பிறை. இன்று நிலவுக்குப் பதினான்கு கலைகள். திரி என்றால் மூன்று என்று பார்த்தோம். தசம் என்றால் பத்து என்று பார்த்தோம். திரயோதசி என்பது பத்தும் மூன்றும் சேர்ந்த பதின்மூன்றைக் குறிக்கும்.
14. சதுர்த்தசி- பதினான்காம் பிறை. இன்று நிலவுக்குப் பதினைந்து கலைகள். சதுர் என்றால் நான்கு என்று பார்த்தோம். தசம் என்றால் பத்து என்று பார்த்தோம். சதுர்த்தசி என்பது பத்தும் நான்கும் சேர்ந்த பதினான்கைக் குறிக்கும்.
15. பௌர்ணமி- பூரண நிலவு. இன்று பூரண நிலவுக்கு கலைகள் பதினாறு. அமாவசையில் இருந்து ஒவொரு கலைகளாக வளர்ந்து இன்று பதினாறு கலைகள் கொண்ட பூரண நிலவாகப் பரிணமிக்கின்றது. .
இந்த திதிகளை பௌர்ணமி- பூரண நிலவு நாள் துவங்கி அமாவாசை - நிலவில்லாத நாள் வரை உள்ள தேய்பிறைக்காலத்தில் கிருஷ்ண பட்ச திதிகள் என்றும், அமாவாசை - நிலவில்லாத நாள் துவங்கி பௌர்ணமி- பூரண நிலவு நாள் வரை உள்ள வளர்பிறை காலத்தில் சுக்ல பட்ச திதிகள் என்றும் அழைக்கிறோம். ஆக மொத்தம் திதிகள் முப்பது.

உலகெங்கும் இருந்த சிவ வழிபாடு.

Leave a Comment
நம் பண்பாட்டில் ஒரு உண்மையை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இல்லாத ஒன்றை இருப்பதாக கூறுவது நமது முன்னோர்களின் மரபும் அல்ல அது அவர்களின் இயல்பும் அல்ல. 
ஆங்கிலத்தில் சூரியனை sun என்ற வார்த்தையில் குறிப்பிடுவது தெரியும். இந்த sun என்ற வார்த்தை சிவன் என்ற வேர்ச்சொல்லிலிருந்து வந்ததே ஆகும். ஆதிகால கிரேக்கர்கள் சீயஸ் என்னும் கடவுளை வழிபட்டதாக வரலாற்று குறிப்புகளில் படித்து இருக்கலாம்.
அந்த சியஸ் கடவுளும் சிவனின் திரிபு அம்சமே ஆகும். பாபிலோன் நாட்டில் அதாவது இன்றைய ஈராக்கில் களிமண் ஓடுகளில் எழுதி வைக்கப்பட்டுள்ள ஆதிகால பட்டயங்கள் சில பூமிக்கு அடியிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. அந்த பட்டயங்களில் சிவன் என்ற பெயர் எழுதி வைக்கபட்டிருக்கிறது. பாபிலோன் நாட்டில் அன்றைய காலத்தில் சிவன் என்ற பெயரில் ஒரு பெரிய நகரமே இருந்திருக்கிறது.
வட அமெரிக்காவுக்கும், தென் அமெரிக்காவுக்கும் இடையே மத்திய பிரதேசமாக திகழும் மெக்சிகோ, பெரு ஆகிய நாடுகளில் பெரிய சிவன் கோவில்கள் இருந்திருக்கின்றன . இன்றும் காலச் சூழலால் கவனிப்பாறற்ற நிலையால் சிதைந்து அவைகள் காணப்பட்டாலும் சிவவழிபாடு உலகம் தழுவிய வழிபாடு என்பதற்கு ஆதாரமாக திகழும் அந்த கோவில்கள் சுமார் 7000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டபட்டதாக ஒரு சாராரும் 10,000 ஆண்டுகள் இருக்கும் என்று ஒரு சாராரும் கணக்கிட்டு சொல்கிறார்கள்.
இந்த சிவாலயங்கள் 1937-ல் கண்டுபிடிக்கப்பட்டு இன்று வரை பாதுகாக்கபட்டு வருகிறது. அதை பற்றிய விளக்கங்களையும் விரிவான நுணுக்கங்களையும் மக்களிடம் எடுத்துச் சொல்லி நமது கலாச்சாரத்தின் பெருமையையும், தொன்மையையும் மக்கள் அறிந்து பெருமிதம் கொள்ள செய்யாமல் இருப்பது நமது மதச்சார்பற்ற அரசுகளின் அலங்கோல ஆட்சி முறைகளே ஆகும்.
சுய-கவுரவம் இல்லாத மனிதன் எவனும் வாழ்க்கை சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற முடியாது அப்படிபட்ட மக்கள் நிறைந்த எந்த நாடும் முன்னேறி விட முடியாது நமது கலச்சாரம் இன்றைக்கு 10,000 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவில் வேர் ஊன்றி இருந்ததற்கான ஆதாரங்கள் பல உள்ளது. அவற்றில் இந்த சிவாலயங்களும் கிரீஸ் தீவில் கண்டெடுக்கப்பட்ட சங்கு, வாத்தியம் போன்ற முத்திரைகளும் தில்லாந்து நாட்டில் சிவன் அதே பெயரிலேயே காக்கும் கடவுளாக வணங்கப்பட்டு வருவதையும் குறிப்பிடலாம்.
சிரியா நாட்டில் ஆதிகால மக்கள் ரிஷிப வாகனத்தில் மான், மழு ஏந்திய தெய்வத்தை வழிபட்டதற்கான சித்திர ஆதாரங்களும், மலேயா, போர்னியா, பாலித்தீவுகள் போன்ற நாடுகளில் சிவவழிபாடு அனாதிகாலம் தொட்டே மக்களின் வாழ்க்கையில் பின்னி பிணைந்திருந்ததற்கான ஆதாரங்கள் பல நமக்கு கிடைத்திருக்கின்றது
அது மட்டுமல்ல உலகில் ஆதிகாலத்தில் சூரியனையே பெருவாரியான மக்கள் வழிபட்டு வந்திருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். சிவன் என்ற வார்த்தைக்கே செம்மை, வெம்மை என்றுதான் பொருள். ஞாயிறு அல்லது சிவப்புநிறமான ஜோதியே சிவபெருமானின்தோற்றமாக வேதங்களிலும் தமிழ் மறைகளிலும் சொல்லப்பட்டிருக்கிறது.
‘ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெரும் ஜோதி விரிசுடராய் நின்ற மெய்யன் பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்து பரந்ததோர் படர்ஒளி பரப்பே ஜோதியாய் தோன்றும் திருவே ஜோதியே சுடரே சூழொளி விளக்கே”
- என்றெல்லாம் வரும் திருவாசகப்பாடலும் சிவ பெருமான் ஜோதி வடிவம் சூரியனின் சொரூபம் என்பதை நமக்கு சொல்லாமல் சொல்லுகிறது. இதை ஆதாரமாகக் கொண்டு நாம் சூரிய வழிபாடு எங்கெல்லாம் உள்ளதோ அவையெல்லாம் சிவ வழிபாடே என்று வாதம் புரிந்தாலும் அது தவறல்ல அறிவுக்கு ஒவ்வாத விஷயமும் அல்ல.
பழைய பாபிலோன் நகரில் சிவவழிபாடு ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்திருக்கிறது. அதன் அடையாளமாக சிவலிங்கங்கள் பல அங்கு இன்னமும் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. அயர்லாந்திலும், ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் கண்டெடுக்கபட்டுள்ள பல சிவலிங்கங்கள் சிவ வழிபாட்டின் முழு வீச்சை நமக்கு காட்டுகின்றன.
உலகம் முழுவதையுமே அரசாண்ட இங்கிலாந்து நாடு ஒரு காலத்தில் ரோமாபுரி நாட்டிற்கு அடிமைபட்டு கிடந்ததை வரலாற்று மாணவன் கூட அறிவான் அப்போது ரோமர்கள் இங்கிலாந்து தேச முழுவதும் லிங்க வழிபாட்டை பரப்பினார்கள் என்பதற்கு பல ஆதாரங்கள் இருக்கின்றன. கடந்த 14-ம் நூற்றாண்டு வரையில் லித்வேனியா நாட்டில் சிவ வழிபாடு இருந்திருக்கிறது. அதுமட்டுமல்ல திபெத், பூட்டான் போன்ற நமது அண்டை நாடுகளிலும் ஜப்பானியரின் அரச மதமான ஹிண்டோ மதத்திலும் லிங்க வழிபாடு இன்றும் இருக்கிறது. இது மட்டும் அல்ல இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான மெக்காவிலுள்ள காபாக்குள் சிவலிங்கமே இருக்கிறது. அதை தொட்டு முத்த மிடுவதே ஹஜ் பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.
வெளிநாடுகளில் மட்டுமல்ல நமது நாட்டிலும் தொல்பழங்காலத்தில் லிங்க வழிபாடு மட்டுமே இருந்திருக்கிறது. அதற்கான ஆதாரங்கள் ஹராப்பா, மொகஞ்சதாரோ போன்ற பகுதிகளில் கிடைத்து இருக்கிறது. மனிதர்களும் பல விதமான விலங்குகளும் சூழ்ந்திருக்க யோக நிஷ்டையில் சிவ பெருமான் வீற்றிருக்கும் யோகத்திருக்கோலம் அப்பகுதிகளில் கிடைத்திருப்பது இதை நமக்கு காட்டுகிறது
எனவே தென்னாடுடைய சிவன் எந்நாட்டவருக்கும் இறைவனாக இருந்திருப்பதும் இருப்பதும் வெறும் கற்பனை அல்ல முழுமையான நிஜமாகும். இந்த நிஜங்கள் நம்மை ஆண்ட வெள்ளைக்காரர்களும் அதற்கு பின்பு நம்மை ஆளுகின்ற அவர்களின் வாரிசுகளும் இதை மறைத்து விட்டார்கள். இன்றும் மறைப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறார்கள்
இத்தகையவர்களிடமிருந்து நமது கலாச்சார வரலாற்றுப் பின்ணனியை காப்பாற்ற நாம் தான் விழிப்புடன் இருந்து பாடுபட வேண்டும். நமது சுயத்தன்மையை இழந்தோம் என்றால் முகமற்ற மனிதர்களாக முகவரியில்லாத கடிதங்களாக வருங்காலத்தில் நமது வாரிசுகள் அல்லாட வேண்டியது இருக்கும். 
பண்பாடு இல்லாத காட்டுமிராண்டி வாழ்க்கையையும் நடத்தவேண்டி இருக்கும். 

ஆத்ம ஞானம் அனைவருக்கும் அவசியம்!

Leave a Comment
ஸ்ரீ ஐஸ்வர்ய மகரிஷி அவர்களின்  உரையிலிருந்து [2015]...

ரிஷிகளின் கல்வி - ரிஷி வேத விஞ்ஞானம்

Leave a Comment

 ஐஸ்வர்ய மஹரிஷி அவர்களின்  "" ரிஷிகளின் கல்வி ""   4 வேதங்களின்  பொருளும் - தமிழில் சுருக்கமாக.. 

      பலன் : நிச்சயமான - உண்மையான - முழுமையான வாழ்வின்பம் ! 

     மூடப்பழக்கங்களோ என்று சந்தேகிக்கப்பட்ட வேத ஆன்மீக உபதேசங்களுக்குப் பின்னால் விஞ்ஞான உண்மைகள் கொட்டிக்கிடக்கின்றன. அவைகளும் நல்வாழ்வினை நடத்த த் தேவையான திறமைகளைத் தருகின்றன.

       சூழ.நிலைகள் மனிதனின் சுகதுக்கங்களை முடிவுசெய்கின்றன. கல்வி, செல்வம், பகழ்,...... எல்லாம் இருந்து ஒருவன் சூழ்நிலைக்கைதிகளாகவே இருக்கிறான்.

       வேதத்தில் ஒரு சூக்ஷ்ம ஞானம் இருக்கிறது. அது ஒருவனை நிச்சயமாய் ஆனந்தமாய் வாழவைப்பது நிலையாக !

         அந்த நிலையில் ஒருவன் எப்போதும் இருந்து கொண்டு சரியான நேரத்தில் சரியான முனிவுகளை எடுக்க முடியும். சூழ்நிலை எதுவாக இருந்தாலும் - சூழ்நிலையால் பாதிக்கபடாமல் வெற்றிகரமாக வாழமுடியும் இது இளம் வயதிலேயே கூட கற்கப்படவேண்டிய அத்யாவசியமான வாழ்க்கை கல்வி.

       ஆண் , பெண் , ஏழை , பணக்கார்ர்  , படித்தவர் , ஆஸ்திகர் , நாஸ்திகர் , அனைவருக்கும்  நன்மை தருவது, பிடித்தது.

         { 90 42 500 500 , 90 42 600 600, 90 42 800 800 }

     நிலை 1 : ஜீவ யாத்ரா ரகஸ்யம் :
            √ வேதம்  என்பது என்ன? என்ன சொல்கிறது? • கடவுள் உண்மையில் இருக்கிறாறா? எங்கே எத்தனை? • இருந்தால் ஏன் வறுமை, ஊனம், அநிநாயம், விபத்துக்கள் ........ எல்லாம்  இருக்கின்றன? • விதி, ஜாதகம்....... எல்லாம் உண்மையா? விதியை மதியால் வெல்ல முடுயாதா? • பாவம் செய்தவர்கள் வளமாக இருப்பது ஏன்? புண்ணியம் செய்பவர்கள் கஷ்டபடுவது ஏன்? • ஒருவன் வாழ்வில் வரும் உறவுகள், சம்பவங்கள் , விபத்துக்கள், நோய்கள், சிரமங்களுக்கு என்ன காரணம்? • ஸ்வர்கம், நகரம்,........14 உலகங்கள் இருக்கின்றனவா? எங்கே? • முற்பிறவி மறுபிறவிகள் உண்மையா? இருந்தால் ஏன் நினைவில்லை? • மரனத்திற்கு பின் ஜீவனுக்கு என்ன ஆகிறது? • போன்ற உங்களைப் பற்றிய அவசியமான , ஆச்சர்யமான பயனுள்ள உண்மைகள் & ரகஸ்யங்கள். 

     √ நிலை 2 : ஈஸ்வர க்ருபா ரகஸ்யம்.
              • வெற்றிகரமாக காரியங்களைச் செய்வது எப்படி? • செய்யும் வேலையில் மனம் ஒருமுகப்படுவது இல்லையே? • எனது & எனது குடும்பத்தாரின் எதிர்காலம் பற்றி நினைத்தால் கவலை வருகிறதே? • கவலைகள் கார்யங்களைப் பாதுக்கின்றனவே? • நற்பலன்களைத் தருமாறு ப்ராத்தனை செய்வது எப்படி? • பிறவிகள் எப்போதும் எப்படி முடியும்? • பிறப்பற்ற  நிலைக்கு என்ன செய்ய வேண்டும்? • எந்த நிலையிலும் பயமின்றி , கவலையின்றி வாழ முடியுமா? எப்படி?

    √ நிலை 3 : ஐஸ்வர்ய குடும்ப ரஹஸ்யம்.
         • எப்போதும் ஆனந்தமாக இருக்குமாறும், பிறகு வருத்தபடாமல் இருக்குமாறும் முடிவுகளை எனுக்கத் தேவையான ஞானம் என்ன? • பஞ்ச மஹா யஞ்ஞங்கள்- என்ன? ஏன்? எப்படி? • கல்யாணம் கணவன் மனைவி உறவு- என்ன? ஏன்? எப்படி? • குடும்பம் உறவுகள் தொழில் எதறகு முக்கியத்துவம் எவ்வளவு?....... இவைகளிடத்தில் நான் செய்தாக வேண்டிய  கடமைகள் எவை? எப்போதுதான் இந்தக் கடமைகள் முடியும்? • நான் கவலைபடத் தேவையில்லாத விஷயங்கள் எவை? எப்படி பிரித்தளிவது? .

     √ நிலை 4 : ஜீவன திருப்தி ரகஸ்யம் :
           • பரிபூர்னமாக வாழும் முறை என்ன? • வாழ்க்கையில் எப்பொழுது எதைச்செய்வது எதை விடுவது என்றே தெரியவுல்லையே? • முடிவெடுக்கவே இயலாத நிலை வருகிறதே? • எல்லாக் கடமைகளையும் செய்து கொண்டே நிம்மதியாக வாழ முடியுமா? எப்படி? • எவ்வளவுதான் பணம் சம்பாதிக்க வேண்டும்? எதற்கு எவ்வளவு செலவிடுவது? எப்போதுதான் உந்த கடமைகள் முடியும்? • உருவ வழிபாடு சரியா? ஏன்? • பலன்தரும் விதத்தில் தினசரி வழிபாடும் ஐபமும் செய்வது எப்படி? • இந்த விஞ்ஞான யுகத்தில் இதெல்லாம் பொருந்துமா? தேவை தானா?.

     √ நிலை 5 : அபய ராஐ வித்யா.
         • வெற்றிகரமாக தலைமை தாங்கும் குணம் குனும்பத்துல், உறவுகளுடத்தில், தொழிலில், சமுதாயத்தில்,...... அனைவரும் ஏற்கும்,  நம்பும், விரும்பும் நபராக தகுதிகளுடன் கவர்ச்சியாக வாழும் கலை & அதற்குத் தேவையான குணம், மனம், ஞானம்.......

      √ நிலை 6 : ஆத்மா ப்ரம்மம் வித்யா.
          • சாக்‌ஷாத்காரம் : கடவுள் தரிசனம்  • ஆத்ம தரிசனம் : பேறின்பப் பெருவாழ்விற்கு வழி • முக்தி \ மோக்ஷம் : கவலைகளிலிருந்து ( வருந்தும் நிலையிலிருந்து ) விடுதலை.    • வேதாந்த ஞான உபதேஷம். • வேதமுறை தியானப் பநிற்சிகள். • பிறவிப்பயன் : இறைவனுடன் ஜக்யமாமல். • குருவை அடைந்து சானம் அடைய என்ன செய்ய வேண்டும்?  • எத்தனையோ ஆன்மீகப் பயிற்சிகளைச் செய்து விட்டேன். எது இறுதியானது?

      √√ விவரங்கள், விதிகள், விதிவிலக்குகள் :
         •  மாதம் ஒரு நிலை, ஒவ்வொரு நிலையும் ஆறு நாட்கள், தினசரி 2 மணிநேரம். • ஆறாம் நாள் விரும்பும் குருதக்‌ஷிணையை சமர்பிக்கலாம்  • பெண்கள் எல்லா நாட்களிலும் வகுப்பிற்கு வரலாம். • திருமணம் ஆனவர்கள் என்றால் இருவருமாகப் பங்கேற்பது மிகவும் பலன் தரும். •  தாமதமாக வர, விடுப்பு எடுக்க, இடையே சேர அனுமது இல்லை. •

    √√ தேவைப்படும் எந்த விவரங்கள் & விதிவிலக்கிற்கும் அணுகவும் - 90 42 800 800.

          ஓம்..

ஜப்பானும் இஸ்லாத்தும்

Leave a Comment
ஜப்பான் குறித்து அறிந்திராத சில விபரங்கள்:

ஜப்பான் இஸ்லாத்தை தூர வைத்திருக்கும் ஒரு நாடு

ஜப்பான் இஸ்லாமியம் மற்றும் அனைத்து முஸ்லிம்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் வைத்துள்ளது..

ஜப்பான் மட்டுமே முஸ்லிம்களுக்கு குடியுரிமை வழங்காத
நாடு ஆகும்.

ஜப்பானில் நிரந்தர குடியுரிமை முஸ்லிம்களுக்கு வழங்கப்பட மாட்டாது.

ஜப்பானில் இஸ்லாமியம் பரப்புவதில் கடுமையான தடை உள்ளது.

ஜப்பான் பல்கலைக் கழகத்தில் அரபு அல்லது இஸ்லாமிய மொழி கற்றுக்கொடுக்கப்படுவது இல்லை

அரபு மொழியில் வெளியான 'குரானை' ஒருவர் இறக்குமதி செய்ய முடியாது.

ஜப்பனீஸ் அரசாங்கம் வெளியிட்ட தகவலின் படி, அது 2 லட்சம் முஸ்லிம்களுக்கு குடியுரிமை கொடுத்துள்ளது. அவர்கள் ஜப்பானிய சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் இந்த முஸ்லிம்கள் ஜப்பனீஸ் மொழி பேச வேண்டும். தங்கள் வீடுகளில் மட்டும் தங்களது மத சடங்குகளை நடத்திக்கொள்ளலாம்.

இஸ்லாமிய நாடுகளின் தூதரகங்கள் இல்லாத உலகின் ஒரே நாடு ஜப்பான்.

ஜப்பான் மக்கள் அனைவரும் இஸ்லாத்தால் கவரப்பட்டது இல்லை.

ஜப்பானில் வாழும் முஸ்லிம்கள் வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் .

இன்றுகூட விசாக்கள், முஸ்லீம் டாக்டர்கள் வழங்கப்படமாட்டாது.

பெரும்பான்மையான நிறுவனங்களின் சட்டங்களில் எந்த முஸ்லிமும் வேலைக்கு விண்ணப்பிக்ககூடாது என்று விதிமுறைகள் உள்ளது.

இந்த நவீன உலகமயமாக்கல் காலத்தில் கூட முஸ்லிம்கள் அடிப்படைவாதிகள். அவர்கள் தங்கள் முஸ்லிம் சட்டங்களை மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லை என்று ஜப்பனீஸ் அரசாங்கம் கருதுகிறது..

முஸ்லிம்கள் ஜப்பான் நாட்டில் ஒரு வாடகை வீட்டைப் பெறுவது பற்றி கூட யோசிக்க முடியாது.

தனது அண்டை வீட்டிலிருப்பவர் ஒரு முஸ்லிம் என்று தெரிய வந்தால் அருகிலுள்ளவர்கள் அனைவரும் எச்சரிக்கையாகி விடுகின்றனர்.

ஒரு இஸ்லாமிய செல் அல்லது அரபு 'Madarsa' எவரும் ஜப்பானில் தொடங்க முடியாது

ஜப்பான் தனிப்பட்ட (ஷரியா) சட்டம் இல்லை

ஒரு ஜப்பனீஸ் பெண் முஸ்லீம் ஒருவரை திருமணம் செய்தால் அவர் ஒரு சமுதாயத்தில் இருந்து நிரந்தரமாக விலக்கப்பட்டவராக கருதப்படுகிறார்.

டோக்கியோ பல்கலைக்கழக துறை தலைவர், திரு Komico "இஸ்லாம் ஒரு குறுகிய மனப்பான்மை உடைய மதம் அதை விட்டு விலகி இருக்க வேண்டும். "என்ற எண்ணம் ஜப்பானிய மக்கள் மனதில் பதிந்துள்ளது” என்கிறார்.

9/11 க்கு பின்னர் இஸ்லாமிய நாடுகள் பலவற்றிற்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர் முகமது Juber அவர்கள் ஜப்பானில் தீவிரவாதிகள் எந்த கெடுதலும் செய்ய முடியாது என்ற நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றனர் என்கிறார். இஸ்லாம் இல்லாமல் இருந்தால்தான் தங்கள் நாடு நன்றாக இருக்கும் என்று ஜப்பானியர்கள் உணர்ந்துள்ளனர். அதனால்தான் ஜப்பான் சிறிய தீவுகளைக் கொண்ட, அடிக்கடி புகம்பம், எரிமலைகளால் பாதிக்கப்படும் நாடாக இருந்தாலும் சிறந்து விளங்குகிறது.

Vijaydashami or Dasha Hara

Leave a Comment
Dasha Hara is a Sanskrit word which means removal of ten bad qualities within you..

Kama vasana (Lust)
Krodha (Anger)
Moha (Attachment)
Lobha (Greed)
Mada (Over Pride)
Matsara (Jealousy)
Swartha (Selfishness)
Anyaaya (Injustice)
Amanavta (Cruelty)
Ahankara (Ego)


It's also known as 'Vijaydashami' which means Vijaya over these ten bad qualities.

The ingenuous meaning of national anthem 'Jana Gana Mana... '

Leave a Comment
Congratulation to all of us.....

Our national anthem "Jana Gana Mana... "is declared as the 
"BEST ANTHEM OF THE WORLD"by UNESCO. 

Kindly share this. 
Very proud to be an INDIAN.

Meaning of our National Anthem























Please try to understand the meaning and pronounce it clearly.

Word by word meaning..

Jana            = People
Gana            = Group
Mana           = Mind
Adhinayaka= Leader
Jaya He      = Victory 

[ O, the leader of the mind of the entire community of our people ! victory  to you always ! ]

Bharata       = of Bharat 
Bhagya       = of Destiny
Vidhata      = Disposer

[ O, the disposer of the destiny of Bharat!.... ]

Punjaba     = Punjab
Sindhu       = Indus
Gujarata    = Gujarat
Maratha    = Marathi Maharashtra

Dravida      = Southern land,
Utkala        = Orissa 
Banga        = Bengal

Vindhya     =Vindhyas
Himachal   =Himalay
Yamuna     = Yamuna
Ganga        = Ganges

Uchchhala = Moving
Jaladhi      = Ocean
Taranga    = Waves

Tava          = Your
Shubh    =Auspicious
Naame = on your name
Jage     = They all are Awaken

[ All the lands like Punjab, Indus, Gujarat, Maharashtra, Southern land, Orissa , Bengal, all the mountains like Vindhyas, Himalayas , all the rivers like Yamuna , Ganges are awaken on your auspicious name . ] 

Tava     = Your
Shubha    = Auspicious
Aashisha = Blessings
Maage     = They ask

[ They ask  Your Auspicious Blessings ] 

Gaahe      = They sing
Tava        = Your
Jaya        = Victory
Gatha      = Song

[ They sing songs of Your victories ! ]

Jana       = Of people
Gana      = Of group
Mangala = Of fortune
Dayaka   = O. Giver 

Jay He    = Victory to You
Bharata  = of India
Bhagya  = of destiny
Vidhata   =   The dispenser 

[ O, the Giver of fortune of people, O, the dispenser of destiny of India, Victory to You ! ]

Jay He, Jay He, Jay He, Jay Jay Jay Jay He = Victory to You, Victory to You , Victory to You, Victory  Victory  Victory  Victory to You !

[ O,such great Lord Ram...! Victory to You always and everywhere ! ]

[ here we should note one thing, many people think that this song refers BharataMataa.

it is not so ,  it is not bad too.

the word 'Adhinayaka' ;'Vidhata' , Dayaka ,  are in Masculine gender not in feminine ones;

and hence they refer Lord Rama as He leads the mind of children of Maa Bharat;

and he was , and he is suppossed to be the admin  or the destiny of the country Bharat.

only Rama deserves such a prize in the universe, & nobody else can. And he is prize worthy ! ]


We should remember the culture of Bharat, a blacksmith makes a sword, people install it in temple and start worship as village lord. from that time of installation it is not sword, it is village lord only. 

the blacksmith might have done it for money or for lord, we don't know, it is up to his heart. 

All  respets and worships offered at the sword is really at village Lord only. No matter what is that blacksmith made it for! 

Victory to National Anthem is victory to the 'Dhesha Bhakti' -  the Patriotism of sons of Maa Bhaarat, and the gratitude for Lord Rama! 


PLEASE SHARE IT AND LET ALL PEOPLE KNOW THE MEANING OF OUR NATIONAL ANTHEM..

JAI HIND!



UNESCO announces INDIAN NATIONAL ANTHEM as the BEST National Anthem in the World. 

watch and be proud & enjoy..... 

https://www.youtube.com/watch?v=SJXdCvUewHk