சனியை பிடிப்போம்.... சாதனை படைப்போம்!

Leave a Comment
சனி பகவான் பற்றிய அறிய தகவல்கள்...

"என்னையே நீ பிடித்ததால் இனிமேல் உனக்கு "சனீஸ்வரன்" என்ற பெயர் வழங்கட்டும்" என்று "சிவபெருமான்" அருளினார். அன்று முதல் சனிபகவானுக்கு "சனீஸ்வரன்" என்று பெயர் வழங்கலாயிற்று

கிரகங்களில் ஈஸ்வரன் என்ற சிறப்புப் பெயருக்குக் காரணமாகி நிற்பவர் "சனி"தான்.

பொதுவாக சனி என்றாலே, எல்லோரையும் ஆட்டி வைப்பவர் என்று பொருள்.

ஆனால் தன்னை யார் ஸ்ரத்தையோடு வழிபடுகிறார்களோ அவருக்கு அல்லது அவர்களுக்கு, கருணையாய் அள்ளித் தரும் வள்ளல் இவர்தான்.

சூரியன் சஞ்சிகை என்பவளை மணந்து வாழ்ந்து கொண்டு வந்தான். அவர்களுக்கு மநு, யமன், யமுனை என்று மூன்று
குழந்தைகள் பிறந்து வளர்ந்து வந்தன!

ஒரு சமயம் சஞ்சிகைக்கு, சூரியனது வெப்பம் தாங்க முடியவில்லை. அதோடு அவளுக்கும் தவம் செய்ய வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது.

இதற்காக சஞ்சிகை ஒரு ஏற்பாட்டை செய்தாள். சூரியனுக்கு தெரியாமல்தான் அவரை விட்டுவிலகவேண்டும் என்பதற்காக, தன் நிழலையே ஒரு பெண்ணாகச் செய்து, அவளை அங்கேயே விட்டுவிட்டு, தந்தையிடம் சென்று விட்டாள்.

அவளுடைய நிழலில் தோன்றிய பெண்ணிற்கு "சாயாதேவி" என்று பெயர் அமைந்தது.

சஞ்சிகையின் வேண்டுகோளை ஏற்ற சாயாதேவி தான் வேறு ஒருத்தி என்பதைத் தெரிவிக்காமலேயே சூரியனோடு வாழ்ந்து வந்தாள்.

அவளுக்கு சாவர்ணீ என்ற மனுவும், சனி பகவானும், பத்திரை என்ற பெண்ணும் பிறந்தனர்.

இந்தக் குழந்தைகள் பிறந்ததும், சாயாதேவிக்கும், சஞ்சிகையின் குழந்தைகள் மீது பாசமே ஏற்படவில்லை.

யமனுக்கு கோபம் வந்தது. தன்னை நேசிக்காத சாயாதேவியை உதைக்கப் போனான்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சாயாதேவி, உன் கால் முறியட்டும் என்று சாபமிட்டாள். யமனுக்கு கால் ஒடிந்தது.

இந்த செய்தி பின்னர் சூரியனுக்குத் தெரிய வந்தது. ஏன் இப்படி வித்தியாசமாக நடந்து கொள்கிறாள், என்று விசாரித்த பொழுது, சாயாதேவி யார் என்பது தெரிந்தது.

பிறகு சூரியன் சாயாதேவியையும் தன் மனைவியாக ஏற்றுக்
கொண்டான்.

தந்தையின் வீட்டில் தவம் புரிந்து கொண்டிருந்த சஞ்சிகையை அழைத்து வந்து இல்லறம் நடத்தி வந்தான்.

யமனது காலும் குணமாயிற்று.

சூரியனுக்கும், சாயாதேவிக்கும் புதல்வனாக தோன்றியவர் சனி பகவான்.

இவர் பூலோகத்திற்கு வந்து காசிக்கு சென்று தன் பெயரால் ஒரு லிங்கத்தை நிறுவி, பூசை செய்து வந்ததினால் நவக்ரகங்களில் ஒருவராக சிறப்புப் பதவியை அடைந்தார் என்று சனி பகவான் வரலாறு கூறுகிறது.

சனிபகவான், ஒரு சமயம் தன் பெரிய தாயாரான சஞ்சிகையை கேவலமாக பேசினார். இதைக் கேட்ட யமன், கோபப்பட்டு சனி பகவானின் காலை உடைத்தார். சனி பகவான் ஒரு கால் ஊனமானார்.

சனி பகவான் ஏன் கெடுதலை தருகிறார் என்பதற்கு ஒரு கதை உண்டு.

சனி பகவானுக்கு தவம் செய்வதில்தான் ஈடுபாடு. இல்லறத்தில் நாட்டமே இல்லை.

இதை அறியாமல் அவருக்கு சித்திரதா என்பவர் தன் மகளை
சனிபகவானுக்கு மணம் செய்து வைத்தார்.

கல்யாணமான பின்பும் கூட தன் மனைவியை நேசிக்காமல் தவத்திலே ஈடுபட்டார் சனீஸ்வரன்.

ஒரு பெண்ணை எதற்காகத் திருமணம் செய்து கொண்டோம் என்பதை மறந்த சனிபகவானை எண்ணி எண்ணி விரக வேதனையால், அவன் மனைவி சபித்துவிட்டாள். "ஒரு பெண்ணின் ஆசையைப் புரிந்து கொள்ளாத நீங்கள், கணவர் என்ற முறையில் வாழத் தெரியாத நீங்கள், தவ வலிமையின் ஆனந்தம் அடையாமல் போவீர்களாக!" என்று சபித்த வார்த்தைகளால், சனிபகவான் நொந்து போனார். அன்று முதல் அவரது பார்வை வக்கிரமாக அமைந்துவிட்டது. மாற்றவே முடியவில்லை என்பது ஐதீகம்.

ஆகமங்களில், சனியினுடைய உருவம், உடை ஆகியவைப் பற்றிய செய்திகள் வருகின்றன. கரிய நிறமுடையவன். கரிய ஆடையை அணிபவன். ஒரு கால் முடவன். இருகரம் உடையவன். வலக்கரத்திலே தண்டமும், இடக்கரத்தில் வரதக் குறிப்பும் உடையவன். பத்மபீடத்தில் வீற்றிருப்பவன். அட்ச மாலையை கொண்டு எட்டு குதிரைகள் பூட்டிய இரும்பு ரதத்தில் பவனி வருபவன்.

சனிபகவானுக்கு இருவகை மந்திரங்கள் உரியது. ஒன்று வேதம். இதற்கு ரிஷியாக இருப்பவர் இளிமிளி. அந்த மந்திரத்தின் பெயர் உஷ்ணிக் என்ற சந்தத்தில் அமைந்தது. மற்றொரு மந்திரம் காயத்ரி சந்தசைக் கொண்டது. அதற்கு ரிஷி - மித்ரரிஷி. நவக்ரக ஆராதனம் என்னும் நூலில்
சனிபகவான் வில்லைப்போல ஆசனத்தில் வீற்றிருப்பான்.

அழகு வாகனம் உடையவன். மேற்கு நோக்கி இருப்பான். நீல மேனி உடையவன். முடிதரித்தவன். சூலம், வில், வரதம், அபயம் கொண்டவன், மெல்ல நடப்பவன். கருஞ்சந்தனம் பூசுபவன். கருமலர், நீலமலர் மாலையை விரும்புகிறவன். கரு நிறக்குடை, கொடி கொண்டவன் என்று சனியைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறது.

சனிக்கு, அதிதேவதை யமன். வலப்பக்கத்தில் இவனை ஆவாகனம் செய்ய வேண்டும். இடப்பக்கத்தில் ப்ரத்யாதி தேவதையாகிய பிரஜாபதி இருப்பார்.

சனியைப் போல் கொடுப்பவருமில்லை, கெடுப்பவருமில்லை.

தமிழ்நாட்டில்தான் சனிபகவானுக்கு காக்கையை வாகனமாக சொல்வது வழக்கம். வடநாட்டில் உள்ள த்யான சுலோகங்களில் சனி பகவானுக்கு கழுகை வாகனமாக குறிக்கின்றனர்.

சனி, மந்தன், பிணிமுகன், முதுமகன், முடவன், காரி என்ற வேறு பெயர்களும் உண்டு. தாமத குணம் உண்டு.

பிரியமான உலோகம்- இரும்பு. மணி- நீளம், தானியம்- எள், மலர்- கரும்குவளை, சுவை- கசப்பு.

காச்யப கோத்திரத்தை சேர்ந்தவர்.

சனியை வழிபட்டால், நீண்ட ஆயுளுடன் வாழலாம்.

சனி பகவானுக்கு ஜேஷ்டா, நீலா, மன்தா என்று மூன்று மனைவிகள் உண்டு. இவர்களில் சனி பகவானுக்கு மிகவும் பிடித்த மனைவி, நீலா.

சனியின் குமாரன், குளிகன். குளிகை காலத்தில் எதைச் செய்தாலும், நன்கு பெருகும். ஆனால் இறந்தவர்கள் உடலை மாத்திரம் எடுக்கக்கூடாது என்பது சாஸ்த்திரம்.

எல்லா கிரகங்களுக்கும் இல்லாத "ஈஸ்வரன்" என்ற அடைமொழி சனிக்கு மட்டுமே உண்டு. ஒரு சமயம் சிவபெருமானையே சனி பிடிக்கும் முறை வந்தது. சனியை தூரத்தில் கண்டதும் "இவன் கையில் பிடிபடக் கூடாது, நிஷ்டையில் அமரப் போகிறேன்" என்று பார்வதி தேவியிடம் கூறிவிட்டு, ஒரு குகையில் சென்று அதன் வாயிலை நன்றாக மூடிக்கொண்டு நிஷ்டையில் அமர்ந்தார் சிவபெருமான்.

ஏழரை ஆண்டுகள் கழிந்தன. சிவபெருமான் தன் நிஷ்டையைக் கலைத்துவிட்டு எழுந்தார். சனி பகவானிடமிருந்து தான் தப்பி விட்டதை எண்ணி மகிழ்ந்தார். குகையின் வாயிற் கதவை திறந்தார். வெளியே வந்தவர், வாசலில் அமர்ந்திருந்த சனிபகவானைக் கண்டதும் வியப்படைந்தார். "வணக்கம். என் வேலை முடிந்துவிட்டது. போய் வருகிறேன்" என்று கூறி
அங்கிருந்து சனி பகவான் கிளம்ப முயன்றார். "எப்படி உன் கடமை முடிந்தது? நான் தான் உன் பிடியில் சிக்கவில்லையே?" என்றார் சிவபெருமான். "தாங்கள் பார்வதி தேவியை விட்டுப் பிரிந்து இந்த ஏழரை ஆண்டுகள் குகையிலே அடைந்து கிடக்கும்படி செய்தவனே அடியேன்தான். அதனால்தான் சொன்னேன், என் கடமை முடிந்து விட்டது" என்றார் சனிபகவான்.

சிவபெருமான் உண்மை இதுதான் என்பதை உணர்ந்து
"என்னையே நீ பிடித்ததால் இனிமேல் உனக்கு "சனீஸ்வரன்" என்ற பெயர் வழங்கட்டும்" என்று அருளினார். அன்று முதல் சனிபகவானுக்கு "சனீஸ்வரன்" என்று பெயர் வழங்கலாயிற்று.

"காக த்வஜாய வித்மஹே, கட்க ஹஸ்தாய தீமஹி தந்நோ மந்த: ப்ரசோதயாத்" என்கிற சனிபகவான் காயத்ரி மந்திரத்தை தினசரி பாராயணமாகக் கொள்ளலாம்.

சனிபகவான் அருள் நன்றாகவே கிட்டும். சனிபகவான் தானே விருப்பப்பட்டு பூசை செய்த ஸ்தலங்கள் பல இந்தப் பூமியில் உண்டு. அவற்றில் என்றென்றும் நிலைத்து நிற்பது "திருநள்ளாறு".

ஏழரை சனி என்பது, அவரவர் ராசிக்கு சனிபகவான் 12ம் இடம், ஜென்ம ராசி, இரண்டாம் இடம் - இந்த வீடுகளை வரிசையாகக் கடக்கும் பொழுது ஏற்படுவது. ஒரு வீட்டைக் கடக்க இரண்டரை வருடங்கள் என மொத்தம் ஏழரை வருடங்கள்.

உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற சந்தேகம், இடம்விட்டு இடம் மாறுதல், குடும்பத்தை விட்டுப் பிரிதல், உத்தியோகத்திலிருந்து விலக்கப்படுதல், பண நஷ்டம், தொழில் நஷ்டம், இவைகள் இக்காலத்தில் ஏற்படும். மொத்தத்தில் லௌகீகம் வளச்சிக்கு பொருத்தம் இல்லாத காலம். அதேசமயம் வைதீகம் வளர்ச்சிகளுக்கு, அதாவது ஆன்மீக வளர்ச்சிக்கு மிகவும் சிறந்த காலம்.

சனீஸ்வரர் இருக்கும் கோயில்களில் முதன்மை பெற்றது, திருநள்ளாறு. இது காரைக்கால் ரயில் மார்க்கத்திலிருந்து தெற்கே ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. ஆதிபுரி, தர்பாரண்யம், நகவிடங்கபுரம், நளேச்வரம் என்ற பெயர்களும் இந்த ஸ்தலத்திற்கு உண்டு. 

நளமகாராஜா ஏழரை சனியில் பீடிக்கப்பட்டு துன்புற்றபோது, இங்கு வந்து நளதீர்த்தத்தில் நீராடி சனிபகவானை பூசித்ததும், சனிபகவான் அவரைவிட்டு விலகியதாகச் சொல்லப்படுகிறது.

இந்த கோயிலில் உள்ள நளதீர்த்தம், பிரம்மதீர்த்தம், சரஸ்வதிதீர்த்தம், அகஸ்தியர்தீர்த்தம் ஆகியவை விசேஷமான தீர்த்தங்கள். திருநள்ளாரில் உள்ள நளதீர்த்தக் கரையில் உள்ள ஸ்ரீ விநாயகரை வலம் வந்து குளத்தின் நடுவில் உள்ள நளமாகாராஜா குடும்பத்தை மரியாதையுடன் வணங்க வேண்டும்.

பிறகு குளத்தில் இறங்கி முதலில் தலையில் கொஞ்சம் ஜலம் எடுத்து ப்ரோக்க்ஷணம் செய்து கொள்ள வேண்டும். பிறகு தகுந்த நபர்களை கொண்டு சங்கல்பம் செய்து கொண்டு, ஸ்நானம் செய்ய வேண்டும். பிறகு கோயிலுக்குள் சென்று சனீஸ்வரனை வணங்கி பிரார்த்தனை செய்து கொள்வது நலம்.

ஜோதிட சாஸ்த்திரம், சனிபகவானை பற்றி கூறும் பொழுது, கீழ்நிலையைச் சேர்ந்தவர்களை தங்க இடமாகக் கொண்டிருப்பான் என்கிறது. அலியாக இருப்பவன். பஞ்ச பூதங்களில் காற்றாக வருபவன். மேற்கு திசைக்கு உரியவன். துலாம் உச்ச வீடு மகர கும்பங்கள் சொந்த வீடு. பூசம், அனுஷம், உத்தரட்டாதி என்ற மூன்று நட்சத்திரங்களுக்கு உரியவன். புதன், சுக்கிரன் நண்பர்கள். செவ்வாய், சந்திரன், சூரியன் - பகைவர்கள். இவனுக்கு ஒரு கால் கிடையாது. அதனால், மந்த நடை நடப்பான். அற்புதமான பராக்கிரம சாலியான இவன், சிவபெருமானது கருணைக்கு எதையும் செய்யக் கூடியவன். நீண்ட கால வாழ்வுக்கும், மரணத்திற்கும் காரணமானவன். வறுமை, கஷ்டம், நோய், அவமரியாதை இதற்கு மூல காரணமாக இருப்பவன். சனி பலமாக இருந்தால் தியாகிகளாகவும், தேசத் தலைவர்களாகவும் மாற முடியும். உலக அறிவில், வெளி நாட்டு மொழிகளில் பாண்டித்தியம் அடைய உதவுவதும் சனி. இரும்புக்கு காரகன். நல்லெண்ணெய் நாயகன். கருப்பு தானியங்களின் பிரதிநிதி. இயந்திரங்களை கற்க, ஓட்ட திறனளிப்பவன். விவசாயம் செழிக்க சனி கருணை காட்ட வேண்டும். உடலில் நரம்பு இவன். கொடிய மனம் உடையவன். கல் நெஞ்சன். வாதம், பித்தம், கபம் மூன்றில், வாதமாக இருப்பவன். தாமச குணத்தோன், ரத்தினங்களில் நீலமாக இருப்பவன். காடு, மலைகளுக்கு உரியவன். ஜோதிட சாஸ்த்திரத்தில், எண் கணிதத்தில் "8"ம் எண்ணை சனீஸ்வரனுக்கு கொடுத்திருக்கிறார்கள்.

வியாதிகள் நீங்கவும், கடன் தொல்லை ஒழியவும், துர்தேவதைகளால் ஆபத்து நீங்கவும் சௌந்தர்யலஹரியில் உள்ள இந்த ஸ்லோகத்தை சொல்லலாம். "த்வயா ஹ்ருத்வா:வாமம் வபு ராபரி திருப் தேந மநஸா ஸரீரார்த்தம் சம்போ ரபரமபி ஸங்கே ஹ்ருதமபூத்! ததா ஹித் வத்ரூபம் சகல மருணாபம் த்ரிநயனநம் குசாப்யா மாநம்ரம் குடில சசி சூடால முகுடம்!"
"ஓம் சமக்நிரக்நிபிச்கரச் சன்ன ஸ்தபது சூர்யா: சம்வாதோ வாதவரப
அபச்ரித: ஸ்வாஹா!" என்கிற மந்திரத்தைச் சொல்லி ஹோமம செய்தால் ஒருவருக்கு இருக்கின்ற கஷ்டங்கள் விலகும், கஷ்டங்கள் வராது, நன்மைகள் கூடும்.

சுயநலம் நல்லதா கெட்டதா...

Leave a Comment
தான் - குடும்பம் - சமுதாயம் இவை மூன்றும் பிரிக்க முடியாதவைகள்.








ஒருவர் தனது குருநாதரிடம் கூறினார், சமுதாயம் எனக்கு எதுவும் செய்யவேண்டாம். நானும் சமுதாயத்தைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை., எனக்கு அந்தக் கடமையும் இல்லை.  நான் உழைக்கிறேன். சம்பாதிக்கிறேன். என் பணம்  சாப்பிடுகிறேன். நீங்கள் எனது உயர்வுக்கு சொல்லிக்கொடுங்கள் செய்கிறேன். எனக்கு விருப்பமில்லாத  சமுதாய நன்மையெல்லாம் எனக்கு சொல்லித்தரவேண்டாமே.



அவரிடம் குருநாதர் சொன்னார், "அப்பா, அப்படி நீ உண்மையில் உன் பணத்தில் மட்டுமே வாழ்பவன் என்றால், நீ உன்னுடைய எல்லா பணத்தையும் எடுத்துக்கொண்டு , போய் செவ்வாய் கிரகத்தில் குடியிரு. அதுதான் நியாயமான செயல்." என்றார்.



தான் - குடும்பம் - சமுதாயம் இவை மூன்றில் ஒன்றை அழித்து இன்னொன்றை நன்றாக வைக்க முயற்சிப்பது நல்லது இல்லை. ஏனென்றால், ஒன்றின் அழிவு நடக்கும்போதே இன்னொன்றின் அழிவும் துவங்கிவிடுகிறது. அது உடனே தெரியாமல் இருக்கலாம் , பிறகு கொஞ்சம் நாள் கழித்து வெளிப்படும்.

பலர் சில நேரங்களில் நினைக்கிறார்கள், சமுதாயத்தை ஏமாற்றி, அல்லது சமுதாயத்தை தொல்லை செய்தாவது என் குடும்பத்தைக் காப்பாற்றப் போகிறேன் என்று, அல்லது என்னைக் காப்பாற்றிக்கொள்ளப் போகிறேன் என்று.

 இன்னும் பலர் சில நேரங்களில் நினைக்கிறார்கள், குடும்பத்தை ஏமாற்றி, அல்லது குடும்பத்தை தொல்லை செய்தாவது என்னைக் காப்பாற்றப் போகிறேன் என்று, அல்லது சமுதாயத்தைக் காப்பாற்றப் போகிறேன் என்று.

 இன்னும் பலர் சில நேரங்களில் நினைக்கிறார்கள், தன்னை அழித்துக்கொண்டு,   குடும்பத்தை காப்பாற்றப் போகிறேன் என்று, அல்லது சமுதாயத்தைக் காப்பாற்றப் போகிறேன் என்று.

இந்த ஆறில் எதுவுமே தவறுதான். அதுமட்டுமல்ல, ஆச்சர்யம் - அனால் உண்மை -  இந்த ஆறில் எதற்குமே வாய்ப்பு இல்லை.

ஒருவன் எதற்கு துரோகம் செய்கிறான் என்பது முக்கியமில்லை. அவன் துரோகம் செய்யும் சக்தி உள்ளவன் = அழிவை செய்யும் கக்தி உள்ளவன் . அது ஒன்றே போதும்.

அது எதனை என்பது பிறகு வருவது. அது இன்று ஒரு திசையில் பாய்கிறது. நாளை அதே கத்தி எந்த திசையிலும் பாயும் சக்தியை உடையது.

இப்போது, நன்கு பலமாக்கப்படுகிறது, பட்டை தீட்டப்படுகிறது, வெறி ஏற்றப்படுகிறது ஒரு திசையை நோக்கி, நாளை அது திசை மாறினால்....

நிச்சயம் மாறும்....

அதேபோல மூன்றில் ஒருவிஷயத்தின் நன்மையைப்பற்றி சிந்திக்கும்போது கூட, அது குறைந்தது மற்ற இரண்டுக்கும் தொல்லை செய்யாத விதத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்வது அவசியம், மற்ற இரண்டுக்கும் நன்மை செய்யும்விதத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள முடிந்தால் மிகவும் அருமை!

அதுதான் நல்லது.......... - இல்லை;
அதுதான் - பாதுகாப்பானது!

வேறு வழியே இல்லை,.......
இது தான் நம் எல்லோரின் தலை எழுத்தும் - நமக்குப் பிடித்திருந்தாலும் சரி , பிடிக்கவில்லை என்றாலும் சரி!

இவைகள் எல்லாம் தேவை இல்லாதவைகளைப் போலத் தோன்றும் - முன் பிறவி மறு பிறவி , புண்ணிய - பாபம், சுவர்க்கம் - நரகம்,... இவைகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாவிட்டால். ஆனால் இவைகள் எல்லாம் உண்மை! இவைகளைப் பற்றிய உண்மைகளை ஒருவனால் கற்க முடியும். கற்பதே நல்லது - மூன்றுக்கும்!

நினைவில் வைக்கவேண்டிய ஒரு சூத்திரம்  -
ஒரு விஷயம் உண்மையாக இருந்து அதனை ஒருவன் பார்க்கத் தவறினால் - அந்த உண்மைக்கு ஒரு நஷ்டமும் இல்லை. ஆனால் அதனைப் பார்க்கத் தவரியவனுக்கே நஷ்டம்!


உதாஹரனமாக, எரிந்துகொண்டு இருக்கும் அடுப்பில் அமர்ந்திருக்கும் தோசைக்கல் சுடும் என்பது ஒரு உண்மை.... அதனை ஒருவன் பார்க்கத் தவறினால் ஏற்கத் தவறினால்- அந்த உண்மைக்கு ஒரு நஷ்டமும் இல்லை. ஆனால் அதனைப் பார்க்கத் தவறியவனுக்கே நஷ்டம்!

இந்த ஆய்வில் தேர்ச்சி பெற்ற ஒரு சுயநலம் தவறே இல்லை...
அதாவது...
மற்ற இரண்டையும் தொல்லை செய்யாத சுயநலத்தில் குற்றம் இல்லை!
அதே போல தனக்கு அழிவைத்தரும் பொதுநலமும் நல்லதே இல்லை!!

Asia - the wonderful meaning behind it....

Leave a Comment
The continent already had the name 'Jambudvipa / जम्बुद्वीप '. The word 'Jambudvipa/ जम्बुद्वीप' literally means "the land of Jambu / जम्बु trees" where Jambu is the name of the species (also called Jambul or Indian Blackberry) and dvipa / द्वीप means "island" or "continent". The actual derived meaning is....
जम्बुवत्  द्वीपः     जम्बुद्वीपः
Jambuvad dvipa: Jambudhvipa: 



that is a 'continent just like Jambu tree [ that is like a Berry tree]




Jambu in Sanskrit generally refers  Indian Blackberry, at the same time,  when it is used as a collective singular it stands for the berry family !

the beauty of berry family is , it gives countless fruits, that means not easy to count. and they give healthy and mild sweaty fruits you can consume any amount! even it is so attractive pleasing to see. 

The continent which produces knowledgeable people and saints like Jambu tree is called 'Jambudvipa'

in this entire Jambudvipa , there are common faith , or common knowledge, or common recognition of Punya-Paapa / पुण्य-पाप, many births / बहुजन्मानि,, other lokas / लोकाः or universes, Vidhi / विधिः or destiny,... in simple the understanding of order or  the understanding of power to maintain order, which was and which is referred by the Sanskrit / संस्कृतम्  root or Dhaatu / धातुः  - 'Eesh / ईश्  - to lord, to govern properly' 

the 'Eesh / ईश्' becomes Eesha: / ईशः , Eeshvara  / ईश्वरः ,...

In Sanskrit and generally in all indian languages, the letters E / इ, Ee / ई,  Ae / ए, Ai / ऐ are coming under one category 'thaalavya / तालव्य  or palatal', 

as the Ae / ए, and Ai / ऐ are just growth of or modifications of E, Ae is called Guna / गुण  of E /  इ /  Ee  /  ई, and Ai / ऐ  is called Vrudhdhi वृद्धि of E  / Ee इ /  ई

according to the need of modification in the meaning of a word , the first letter of a noun can take vrudhdhi or guna to tell it

for eg, Shiva / शिव - becomes Shaiva शैव = which is belonging to Shiva / शिव 
Vishnu / विष्णु - becomes Vaishnava वैष्णव  = which is belonging to Vishnu / विष्णु 
Eeshvara / ईश्वर becomes Aishvarya ऐश्वर्य = which is belonging to Eeshvara / ईश्वर
Isha ईश [ the omnipotent ruler ] becomes Aisha ऐश which is belonging to Isha ईश
it becomes Aisha: ऐशाः = Aishahaa = the people who are belonging to Isha ईश
or the people who have dedicated themselves to Isha ईश
or the people who have dedicated themselves to the concept of Isha ईश

This is an obvious truth,that there were Hindu worship lifestyle in Arab countries before the birth of Mohamed or Christ.   

Stan / स्थान्   is a Sanskrit word, which  means a place. For eg. Rajastan,.. Now, we should think about the names of countreis in Asia,...
Hindustan 
Pakistan
Afghanistan 
Kazakhstan 
Tajikistan 
Kyrgyzstan 
Turkmenistan 


and many of countries has got th sanskrit wrod 'Eesh' itself in their names. For eg. 
Israel 
Malaysia 
Indonesia

In som situation , the sound Ish, Eesh becomes Ir , Eer in Sanskrit grammar, hence we get the names...
Iraq
Iran

some of Asian countries has got other sanskrit words or parts in their name, 
For eg, 
Bangladesh [ from दिश् ]
Vietnam [ from व्यद् - नाम्  ]
Myanmar [ from मर् - मृ  ]
Yemen [ from यम - यम्  ]
Korea [ from घोर् ]


Weather we like it or not, the name Asia tells that the land [ or people ] committed to Eesha / Ishwara / The Lord / The God - whatever the name may be.

If we see,  'Jesus Christ' the origin of Christianity, he is an Asian. His name itself has got the Sanskrit root 'Eesh' ! And Mohamed the origin of Islam , his religion islam itself has got the sanskrit root 'Eesh' ! 

[Remember: the Sanskrit / संस्कृतम्  root or Dhaatu / धातुः  - 'Eesh / ईश्  - means to lord' ! ]

 Both are Asian ! Leaving the other arguments  - what are Christians or Muslims doing to the world now  -... they Jesus christ and Mohamed were committed to and surrendered to The Lord , and they taught to be surrendered to The Lord !  

Weather we like it or not, the name Asia tells that the land [ or people ] committed to Eesha / Ishwara / The Lord / The God - whatever the name may be.







We can see in the culture of Asia ,all the communities has got devotion on Mount Kailash, Lord Shiva,... We can see people from all over Asia coming to mount Kailash to worship!





If at all a perfect admin exists in this creation , it can only be maintained surly and only with the support of many birth system , many lokas , and Punya-Paapa,.... 



That capacity to bring about perfect admin over the creation of the creator is called Eesh


We can see this concept is accepted and used all over the Asia even today since thousands of generations. 


Hence the world people use to refer them as Aishahaa to mean that they are the one who have dedicated themselves to the concept of Eesha, or just to make a fun on them too. 


The land of Aishahaa is said as Aishia and in time became Asia , still it means the land which has  dedicated itself to the concept of Isha ! 



விநாயகரை வணங்குவோம்

Leave a Comment

விநாயகப் பெருமான்– மனித கண்கள், யானை முகம், பேழை வயிறு, தேவ அம்சம் என   அதிசய– அற்புத திருவடிவை கொண்டவர். 

அதுமட்டுமல்ல விநாயகப் பெருமான், அவரே ‘ஓம்’ என்னும் பிரணவ வடிவமாகவும், ‘கம்’ என்னும் பீஜ மந்திரமாகவும் காட்சி தருபவர். 





அருகம்புல், வெள்ளை எருக்கம்பூ, வன்னி இலை போன்றவை விநாயகருக்கு பிடித்தமானவை. இதனைக் கொண்டு அவருக்கு அர்ச்சித்து வழிபட்டால் சகல நன்மைகளும் வந்து சேரும், கிரக பீடைகள் விலகும். சிரமங்கள் குறையும்.


நம்வாழ்க்கையில்  எத்தகைய இடையூறுகளை எதிர்வந்தபோதிலும்  இடைவிடாது ஸ்ரீ கணபதி காயத்ரியை ஜபிப்பதால் அவற்றை ஜெயித்து விக்கினங்களை விளக்கி வெற்றி காண வைக்கும்  மந்திரம். இது 
அனுபவபூர்வமான சத்தியம் 
பொதுவாக அனைவரும் ஏற்றுக்கொண்ட ஸ்ரீ கணபதி காயத்ரி இதுவே .

ஓம் தத் புருஷாய வித்மஹே 
வக்ரதுண்டாய தீமஹி 
தன்னோ தந்தி ப்ரசோதயாத் 

நெடுங்காலமாக துரத்திவரும் துரதிருஷ்டத்தை விலக்கி நிலைத்து நிற்கிற அத்ருஷடத்தையும் மகிழ்ச்சியையும் தரக்கூடியது இது 



அதேபோல இந்த கணபதி காயத்ரியும் வழக்கத்தில் உள்ளது. 

‘ஓம் ஏக தந்தாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ; தந்தி ப்ரசோதயாத்’

எது ஒருவருக்கு ப்ரியமானதாகவும் மனதிற்கு இதமானதாகவும் இருக்கிறதோ அதனை ஜபம் செய்யலாம். 

தினசரி 3, 9, 18, 27, 54, 108 அல்லது 1008.முறைகள் ஜபம் செய்து வளங்களைப் பெறலாம். செய்யும் அளவிற்கு நல்லதே. 

மேலும் மகா கணபதியின் 16 அர்ச்சனைக்குரிய நாமங்கள்: 

ஓம் சுமுகாய நமஹ, 
ஓம் ஏக தந்தாய நமஹ, 
ஓம் கபிலாய நமஹ, 
ஓம் கஜகர்ணிகாய நமஹ, 
ஓம் லம்போதராய நமஹ, 
ஓம் விகடாய நமஹ, 
ஓம் விக்ன ராஜாய நமஹ, 
ஓம் பாலச்சந்தராய நமஹ, 
ஓம் கஜானாய நமஹ, 
ஓம் கணாதிபதயே நமஹ, 
ஓம் தூம கேதுவே நமஹ, 
ஓம் வக்ர துண்டாய நமஹ, 
ஓம் ஹேராம்பாய நமஹ, 
ஓம் ஐங்கராய நமஹ, 
ஓம் ஸ்கந்த பூர்வஜானியே நமஹ, 
ஓம் ஸ்ரீ சகங்ரடஹர கணபதயே நமஹ.

இவைகளை ஒருமுறை சொல்லி புஷ்பங்களால் அர்ச்சித்து வழிபட்டால் சங்கடங்கள் குறையும், காரியங்களில் வரும் இடையூறுகள் குறையும், வெற்றிகரமான வாழ்க்கை அமையும். 

கதை: எது முக்கியம் வாழ்வில்?

Leave a Comment
ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள்.

ஆனால் அவன் தனது நான்காவதுமனைவியை மட்டும் மிக அதிகமாகநேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான்.
அவளுக்குத் தேவையானதை எல்லாம் செய்து கொடுத்தான்.

அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான்.
ஆனால் அவளை தனதுநண்பர்களுக்கு முன்னால்காட்டிக்கொள்ள பயந்தான்.
பிறரோடு ஓடி விடுவாளோ என்றுபயந்தான்.

அவன் தனது இரண்டாவதுமனைவியையும் நேசித்தான்.
ஆனால் தனக்கு பிரச்சினைகள்வரும்போது மட்டும் அவளிடம்போவான். அவளும் அவனுடையபிரச்சினைகளில் உதவினாள்.

ஆனால் அவன் ஒருபோதும் தனது முதல் மனைவியை கண்டுகொண்டதே இல்லை. ஆனால் அவளோ அவன்மீதுமிகவும் நேசம் வைத்திருந்தாள்.அவனது எல்லா தேவைகளையும்அவள் கவனித்து கொண்டாள்.

ஒருநாள்...
அவன் மரணப்படுக்கையில்விழுந்தான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்டான்.

தான் இறந்தபின் தன்னுடன் இருக்க ஒரு மனைவியை விரும்பினான்.
எனவே தன்னுடன் சாக யார் தயாராய்இருக்கிறார்கள் என அறிந்துகொள்ளவிரும்பினான். தான் அதிகம் நேசித்த நான்காவது மனைவியை உடன் வருமாறு அழைத்தான்.
அவளோ அதிரடியாக மறுத்துவிட்டுஅவனை விட்டு நீங்கினாள்.

அவன்தனது மூன்றாவது மனைவியைஅழைத்தான்.
அவளோ நீயோ சாகப்போகிறாய்.
நான் வேறு ஒருவருடன்போகப்போகிறேன் என்று கூறிவிட்டுசென்றுவிட்டாள்.

பிறகு தனதுஇரண்டாவது மனைவியை அழைத்துக்கேட்டான்.
அவளும் சாரி என்னால் உன்கல்லறைவரைக்கும் கூட வரமுடியும்.
கடைசி வரை உன்னுடன் வரமுடியாது என்று மறுத்துவிட்டாள்.

நொந்துபோன அவன் இதயம் தளர்ந்துபோனது. அப்போது தான் அவனதுமுதல் மனைவியின் நினைவு வந்து அவளை நோக்கித் திரும்பினான்.

அவளது குரல் ஒலித்தது. "நீ  எங்கே போனாலும் நான்உன்னுடனே இருப்பேன்.
உன்னுடன் நான் கண்டிப்பாகவருவேன் "  என்று சொன்னாள்.

ஆனால் அவளோ எலும்பும் தோலுமாக பலமிழந்து நிற்கவும் இயலாமல் இருந்தாள். காரணம் அவன் அவளை என்றுமே கவனித்துக்கொள்ளாததுதான்.

அவன்வருந்தினான். 'நான் நன்றாக இருக்கும்போதே உன்னையும் சரியாக கவனித்திருக்கவேண்டும். தவறிவிட்டேனே' என்று அழுதான்.
வருத்தத்திலேயே இறந்தும்  போனான். அதை அறிந்த உடன் அவளும் பயணம் செய்தாள்.

உண்மையில் உனக்குமே கூட இந்த நான்கு மனைவியரும் உண்டு!

4. நான்காவது மனைவி உன் உடம்பு.
நாம் என்னதான் வாழ்நாள் முழுக்கநன்றாக கவனித்துக் கொண்டாலும் கடைசியில் உன்னுடன் வரப்போவதில்லை.
நீ இறந்ததும் அதுவும் மான்னாகி, பின் வேறு யாருக்கோ உடலை அமைகிறது!

3. மூன்றாவது மனைவி உனது சொத்துசுகம்தான்.
நாம் மறைந்ததும் அவை வேறுயாருடனோ சென்றுவிடுகிறது.

2. நமது இரண்டாம் மனைவி என்பதுநமது குடும்பம் மற்றும் நண்பர்கள்.
அவர்கள் நமது கல்லறை வரையில்தான் நம்முடன் கைகோர்ப்பார்கள்.
அதற்குமேல் நம்முடன் கூடவே வரப்போவதில்லை.  அவர்கள் நீ இன்றி இருப்பவர்களுடன் அவர்களது வேலையைத் தொடருவார்கள்.

1. நாம் கவனிக்காமல் விட்ட முதல்மனைவி நமது ஆன்மா.


நாம் நன்றாக இருக்கும் போது நம்மால்கவனிக்கப்படாமல் நலிந்து சிதைந்துபோய் இருந்தாலும் நம்முடன் இறுதிவரை கூட வரப்போவது நமது ஆன்மாதான்.

 ஆன்மா ஆரோக்யமாக இருகத்தேவை ஞானம்!

எது முக்கியம் வாழ்வில்?

'ஓம்' - காரத்தின் பையோ பவர்!

Leave a Comment





















ஓம்: உடலில் செய்யும்
அளப்பரிய அதிசயங்கள்

ஓம் என்ற மந்திரம் உலகிற்கே உரித்தான
மந்திரம் என்று வேதகாலத்து ரிஷிகள்
கூறி இருப்பதையும் அந்த உன்னத
மந்திரத்தை வேத உபநிடதங்கள் போற்றித்
துதிப்பதையும் நன்கு அறிவோம் ; இந்த
நவீன யுகத்திற்கேற்ற விஞ்ஞான மந்திரம்
அது என்று புதிய ஒரு ஆய்வின்
முடிவில் ஆராய்ச்சியாளர்கள்
சொல்லும்போது நமது வியப்பின்
எல்லைக்கு அளவில்லை ;
அமராவதியில் உள்ள சிப்னா காலேஜ்
ஆப் என் ஜினியரிங்க்
அண்டு டெக்னாலஜியில்
பேராசியராகப் பணியாற்றும் அஜய்
அணில் குர்ஜர் அந்தக் கல்லூரியின்
முதல்வர் சித்தார்த் லடாகேயுடன்
இணைந்து ஓம் பற்றிய ஆராய்ச்சியில்
இறங்கினார்.

இந்த ஆராய்ச்சியில் அவர்கள் இறங்கக்
காரணம் நாளுக்கு நாள் வணிகம்
செய்வோர்,தொழிற்சாலை
அலுவலகங்களில் பணிபுரிவோர்
உள்ளிட்ட அனைவருக்கும் ஏற்படும்
தாங்கமுடியாத மன அழுத்தமும்
அதனால் ஏற்படும் வேதனைகளும்
அவர்களைப் படுத்தும் பாடும்தான்!
உளவியல் ரீதியிலான மன
அழுத்தத்திற்கு மருந்து எது என்று
ஆராயப்புகுந்த அவர்கள் ஓம் மந்திர
உச்சரிப்புதான் அதற்கான
மாமருந்து என்று சோதனை
மூலமாகக் கண்டுபிடித்தனர்.

ஓம் என உச்சரிப்பதால் ஒரு புதிய
உத்வேகம் உடலில் ஏற்படுவதையும்
பிரக்ஞை தூண்டப் படுவதையும் மனதின் வரையறுக்கப்பட்ட தடைகள் இந்த
மந்திர ஒலியால் மீறப்படுவதையும்
அவர்கள்
உறுதிப்படுத்துகின்றனர். இதைக்
கண்டுபிடிக்க அவர்கள் வேவ்லெட்
ட்ரான்ஸ்பார்ம்ஸ் மற்றும் டைம்
ப்ரீகுவென்ஸி அனாலிஸிஸ்
(Wavelet Transforms, Time- frequency Analaysis)
ஆகிய உத்திகளைப் பயன்படுத்தினர்.

ஓம் என
உச்சரிக்கும் போது ஈஈஜி அலைகளில்
மாறுதல்கள் ஏற்படுவதையும்,
மூளையில் ஒலியினால் மின்செயல் மாறுபாடுகள் ஏற்படுவதையும், 
அவர்கள் நவீன சாதனங்கள் மூலம்
குறித்துக் கொள்ள
முடிந்தது. ஈஈஜி சிக்னல் மூலம் "ஓம்" என்பதை உச்சரிப்பதற்கு முன்னரும், பின்னரும், நரம்பு மண்டலத்தில் ஏற்படும் மாறுதல்களை அவர்களால் கண்காணிக்க
முடிந்தது.
மந்திர ஒலிகள் மனிதர்களின்
நரம்பு மண்டலத்தில் அதிசயமான நல்ல விளைவுகளை ஏற்படுத்துகின்றன
என்கிறார்கள்.

ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற
முப்பெரும் தொழில்களை,  பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகியோர்
செய்வதை  இந்து தர்மம் கூறுவதையும் "ஓம்" மந்திரத்தில் உள்ள அகார, உகார, மகாரங்கள் “ பிரம்மா, விஷ்ணு, ருத்ரனை” க் குறிப்பதையும், 
அனைவரும் அறிவர்.

"ஓம்" என நாம் ஒலிக்கும்போது,  பிரபஞ்ச ஆற்றல்கள், நேரடியாக அதிர்வுகள் மூலமாக, நமது உடலில் நுழைகின்றன. வாயின் பின்புறம்
உதிக்கும் “அ” சுவாசிப்பு அமைப்பில் அடிவயிற்றில் உணரப்படுகிறது.
வாயின் நடுவில் பிறக்கும் “உ ” மார்புப் பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குவிந்த உதடுகளில் வழியே வரும் “ம”
தொண்டை மற்றும் தலையில் உள்ள சுவாச அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்த ஒவ்வொரு ஒலியும், ஒரு குறிப்பிட்ட ஆற்றலை, உடலின் சிறு திசுவிலிருந்து முழுசுவாச அமைப்பு வரை, ஏற்படுத்துகிறது. ஓம்
முழுதாக ஒலிக்கப்பட்டவுடன் பிராண ஆற்றல் உடல் முழுவதும் பாய்கிறது.
ஆராய்ச்சியில் ஈடுபட்டது ஏன்?
இப்படிப்பட்ட ஆராய்ச்சியில் அணில் குர்ஜருக்கு, ஏன் ஈடுபாடு வந்தது, என்பதற்கு அவர் வாழ்க்கையில் நடந்த,  ஒரு சம்பவமே காரணம் ஆகும்.

29.5.1999 அன்று தொலைபேசியில்
பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென
அவரது தாயாருக்குப் பேசும் சக்தி போய்விட்டது. மூளையில் ரத்தம் கட்டி விட்டதால், நினைவையும் இழந்து,  அவர் பக்கவாதத்தால்
பாதிக்கப்பட்டார். அடுத்த நாள், அவருக்கு கோமா நிலை ஏற்பட்டது.
ஆனால், இப்போதோ அவருக்கு 90% பழைய ஆற்றல் வந்து விட்டது. அவருக்கு ஸ்பீச்தெரபி எனப்படும் பேச்சாற்றல் மருத்துவம் தரப்பட்டதே இதற்குக் காரணம். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், 
மூளையில் ரத்தம் உறைவதற்கான காரணம் ஹைபர் டென்ஷன் மற்றும் அதிக மன அழுத்தமே என
தெரிவித்தனர். இப்படிப்பட்ட நிலையைப்
போக்குவதற்கான சிறந்த சொல்
எது என்று ஆராயப் போக,  அவர் "ஓம்" ஆராய்ச்சியில் இறங்கி, 
"ஓம்" மந்திரத்தின் அற்புத ஆற்றல்களை அறிந்தார். மந்திரத்தின்
ஆற்றல்களை அறிய டிஜிட்டல் சிக்னல்
ப்ராஸஸிங் உத்திகளை அவர்
பயன்படுத்தினார்.

"ஓம்" பற்றிய வேறு சில ஆராய்ச்சிகள்:
தகாஷி எடல் என்பவர் 1999 இல்
மேற்கொண்ட ஆய்வில் குறைந்த
அதிர்வெண் கொண்ட சப்தம் உடலில்
மார்பு மற்றும் அடிவயிற்றுப்
பகுதிகளில்
மாற்றங்களை ஏற்படுத்துகிறது
என்பதைக் கண்டறிந்தார்.

இதை அடுத்து
2003 இல் ஹெய்ஸ்னம் ஜினாதேவி எடல்
ஓம் மந்திர உச்சரிப்பை ஆராய்ந்த போது அது இருபகுதிகளைக் கொண்டிருப்பதைக் கண்டு “ஓ” என்று ஆரம்பித்து “ம்” என்று முடிக்கும் போது உடலில்
ஏற்படும் மாறுதல்களைத்
தொகுத்தார். இந்த உச்சரிப்பு மனிதனின்
நரம்பு மண்டலத்தில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்துவது ஒவ்வொரு ஆராய்ச்சி முடிவிலும் தெளிவாக விளங்க ஆரம்பித்தது.

ஏழு சக்கரங்களிலும் அதிர்வு இதையெல்லாம்
முன்னோடி ஆராய்ச்சியாக்
கொண்டு, 
அனில் குர்ஜர்
25 முதல் 40 வயது வரை உள்ள ஆண் பெண்கள் அடங்கிய 125 பேர் கொண்ட
ஒரு குழுவிடம் ஆறுவருட காலம்
தனது ஆராய்ச்சியை நடத்தினார்.
அமைதியான ஒரு அறையில் 44.1
ஹெர்ஸ்ட் சாம்ப்ளிங் வீதத்தில் 16 பிட்
அமைப்பில் ஒரு மைக்ரோபோன்
மூலமாக ஓம் மந்திரத்தை ஓதச்
செய்து,  ஆய்வுகள் தொடரப்பட்டன.
20 நிமிடங்கள் ஓம் ஒலிக்கப்பட்டவுடன்
மூளையிலும் நரம்பு மண்டலத்திலும்
ஏற்படும் மாறுதல்கள் துல்லியமாக
ஆராயப்பட்டன. இந்த ஆய்வின் முடிவில்,

1. ஓம் மந்திரத்தை உச்சரிப்பதால் மன
அழுத்தம் குறைகிறது.
2. எதன் மீதும் செய்யப்படும்
கவனக்குவிப்பு அதிகரிக்கிறது.
3. ஏழு உச்சநிலைகளைக் கொண்ட "ஓம்" உடலின் ஏழு சக்கரங்களில் அதிர்வெண் மூலமாக ஒரு பெரிய
குறிப்பிடத்தக்க
மாறுதலை ஏற்படுத்துகிறது என்று கண்டார்.

மூலாதாரத்தில் 256
ஹெர்ட்ஸீம் ஸ்வாதிஷ்டானத்தில் 288 ஹெர்ட்ஸீம் மணிபூரத்தில் 320
ஹெர்ட்ஸீம் அனாகதத்தில் (இதயம்) 341.3
ஹெர்ட்ஸீம், விசுத்தாவில் (தொண்டை )
384 ஹெர்ட்ஸீம் , ஆக்ஞாவில் (மூன்றாவது கண்) 426.7 ஹெர்ட்ஸீம், சஹஸ்ராரத்தில் 480 ஹெர்ட்ஸீம்
அளக்கப்பட்டு,  உடலின் ஏழு சக்கரங்களும்
புத்துணர்ச்சி அடைவதை ஆய்வு
நிரூபித்தது.
ஒலியால் உடலை ஒருங்கிணைக்கும் 
"ஓம்". 
ஓம் மந்திரத்தை உச்சரிக்கும்போது
மிகவும் நுண்ணிய உறுப்பான காதுகள் மெடுல்லா மூலமாக உடலின் திசுக்களை இணைக்கிறது. நமது
உடலின் தன்மை சமன்பாடு, நெகிழ்வுத் தன்மை, பார்வை,  அனைத்தும், ஒலியால் பாதிக்கப் படுவதால், ஓம் உருவாக்கும் நல்ல ஒலி, நன்மையைத் தருகிறது. இது வேகஸ் நரம்பு மூலமாக,  உள் காது,  இதயம், நுரையீரல், வயிறு, கல்லீரல், சிறுநீரகப்பை,  சிறுநீரகங்கள், சிறுகுடல், பெருங்குடல் ஆகிய அனைத்து உறுப்புக்களையும் இணைத்து நன்மையை நல்குகிறது.

இப்படி "ஓம்" ன் பெருமையை விஞ்ஞான ரீதியாக விளக்கிக் கொண்டே போகலாம். அவ்வளவு உண்மைகளை ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கிறார் அனில்குர்ஜர்.
அவருக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துள்ளார், அவரது பிரின்ஸிபல் சித்தார்த் லடாகே.
இவர்களின் ஆராய்ச்சி இன்னும் தொடர்கிறது. மந்திரங்களின் மகிமை பற்றிய விஞ்ஞான விளக்கப் புதுமைகள்  இன்னும் அதிகமாக வரவிருக்கின்றன.

அறிவைப் பெருக்கும் தோப்புக்கரணம்:

Leave a Comment



ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை. 

ஆனால் இந்த தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார். அவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார். பரிட்சைகளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் ஒரு பள்ளி மாணவன் தோப்புக்கரண உடற்பயிற்சியைச் சில நாட்கள் தொடர்ந்து செய்த பின் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்ததாகக் கூறுகிறார்.

யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் அங் (Dr. Eugenius Ang) என்பவர் காதுகளைப் பிடித்துக் கொள்வது மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுகின்றன என்று சொல்கிறார். அதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளிலும் சக்தி வாய்ந்த மாற்றங்கள் ஏற்படுவதாக அவர் தெரிவிக்கிறார். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன என்று சொல்கிறார்.

தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை EEG கருவியால் டாக்டர் யூஜினியஸ் அங் அளந்து காண்பித்தார். மூளையில் நியூரான்கள் செயல்பாடுகள் அதிகரிப்பதை பரிசோதனையில் காண்பித்த அவர் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைவதாகவும் சொன்னார். மிக நுண்ணிய தகவல் அனுப்பும் காரணிகள் வலுப்பெறுவதும் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டாக்டர் யூஜினியஸ் அங் தானும் தினமும் தோப்புக்கரணம் போடுவதாகக் குறிப்பிடுகிறார்.

Autism, Alzheimer போன்ற இக்காலத்தில் அதிகரித்து வரும் நோய்களுக்குக் கூட இந்த தோப்புக்கரண உடற்பயிற்சியை ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள். தோப்புக்கரணம் தினமும் செய்வதன் மூலம் மேற்கண்ட நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிக நல்ல பலன்களைப் பெறுவதாக அவர்களது பரிசோதனைகள் சொல்கின்றன. 

ப்ராணிக் சிகிச்சை நிபுணர் கோ சோக் சூயி (Master Koa Chok Sui) தன்னுடைய Super Brain Yoga என்ற புத்தகத்தில் தோப்புக்கரணத்தைப் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய சொற்பொழிவுகளிலும் இதை அதிகம் குறிப்பிடுகிறார். 

இதனால் தான் தோப்புக்கரணம் பள்ளிகளில் நம் முன்னோர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. படிக்காத மாணவர்கள் தோப்புக்கரண முறையால் தண்டிக்கப்படுவதன் மூலம் அவர்களது அறிவுத் திறன் அதிகரிக்க வழியும் காண்பிக்கப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.

இந்த தோப்புக்கரணப்பயிற்சியை தினந்தோறும் மூன்று நிமிடங்கள் செய்தால் போதும் வியக்கத் தக்க அறிவு சார்ந்த மாற்றங்களைக் காணலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அவர்கள் பரிந்துரைக்கும் தோப்புக்கரண பயிற்சியை அவர்கள் சொல்கின்ற முறையிலேயே காண்போமா?

உங்கள் கால்களை உங்கள் தோள்களின் அகலத்திற்கு அகட்டி வைத்து நின்று கொள்ளுங்கள். உங்கள் பாதங்கள் நேராக இருக்கட்டும். வலது காதை இடது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். அதே போல் இடது காதை வலது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். பிடித்துக் கொள்ளும் போது இடது கை உட்புறமாகவும், வலது கை வெளிப்புறமாகவும் இருக்க வேண்டும் என்பது முக்கியம். 

மூச்சை நன்றாக வெளியே விட்டபடி அப்படியே உட்கார்ந்து மூச்சை உள்ளே நன்றாக இழுத்தபடி எழுந்து நில்லுங்கள். மூச்சும், உட்கார்ந்து எழுவதும் ஒரு தாளலயத்துடன் இருக்கட்டும். 

செய்து பழக்கமில்லாதவர்களுக்கு ஆரம்பத்திலேயே மூன்று நிமிடங்கள் தொடர்ந்து தோப்புக்கரணம் செய்வது கடினமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் ஒரு நிமிடம் செய்வதில் இருந்து ஆரம்பித்து நாட்கள் செல்லச் செல்ல இரண்டு நிமிடங்கள், பிறகு மூன்று நிமிடங்கள் என்று அதிகரியுங்கள். 

ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் மிக நல்ல பலன்களைப் பார்க்கும் போது உங்கள் அறிவுத் திறனின் வளர்ச்சிக்காக மூன்று நிமிடங்கள் தினமும் செலவழிப்பது மிகப்பெரிய விஷயமல்ல அல்லவா?.

கறிவேப்பிலையின் அவசியம் ....

Leave a Comment
தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்?


பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று தெரியுமா? கறி வேப்பிலை  இலையின் மருத்துவ இரகசியங்கள்!!! கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது. மேலும் கறிவேப்பிலை முடியின் வளர்ச்சிக்கு நல்லது என்று பலர் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் அதனை பச்சையாக தினமும் காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உணவில் நல்லெண்ணெய் அதிகம் சேப்பீங்களா? அப்ப நீங்க ஆரோக்கியசாலி தான்... அதிலும் இதனை தொடர்ந்து 120 நாட்கள் சாப்பிட்டு வந்தால், என்ன நன்மைகளெல்லாம் பெறலாம் என்று தெரியுமா? இங்கு தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

கொழுப்புக்கள் கரையும்: 

காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.

இரத்த சோகை:

 இரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.

சர்க்கரை நோய் :

 சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

இதய நோய்: 

கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.

செரிமானம் :

 நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.

முடி வளர்ச்சி :

கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.

சளித் தேக்கம்: 

சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.

கல்லீரல் பாதிப்பு: 

நீங்கும் கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும்.

ஏன் மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதில்லை....?

Leave a Comment
அமெரிக்க நாட்டைச் சார்ந்த திரு.லூயிஸ் பீட்டரின் கண்டுபிடிப்பு.
ஏன் மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள்
பெறுவதில்லை....?
.
அது மாணவர்களின் தவறு கிடையாது,
அவர்களுக்கு படிப்பதற்கு நேரமே கிடைப்பதில்லை..
வருடத்தில் 365 நாட்கள்
மட்டுமே உள்ளது தான் ஒரு பெரிய
குறை..
உதாரணத்திற்கு ஒரு மாணவனின்
ஒரு கல்வி ஆண்டை எடுத்துக்கொள்வோம்..
.
1.ஒரு வருடத்திற்கு 52 ஞாயிற்றுகிழமைகள்..
மற்ற நாள்கள் 313 (365-52=313)
.
2.கோடை விடுமுறை 50. ரொம்ப வெப்பமான
காலம் என்பதால் படிப்பது கஸ்டம்.
மீதி 263 நாள்கள் (313-50=263).
.
3. தினமும் 8 மணி நேரம் தூங்கும் நேரம்
என்பதால்
(கூட்டினால் 122 நாட்கள் வருகிறது).
மீதி 141 நாட்கள் (263-122=141).
.
4. 1 மணி நேரம் விளையாட்டு நேரம் வளரும்
பசங்களுக்கு நல்லது. நாள் கணக்கு படி 15 நாள்.
மீதி 126 நாட்கள் (141-15=126).
.
5. 2 மணி நேரம் சாப்பாட்டு நேரம் . நன்றாக
மென்று சாப்பிடு என்று அறிவுறுத்தப்படுவதால்
30 நாள்கள்.
மீதி 96 நாட்கள் (126-30=96).
.
6. 1 மணி நேரம் பேசியே கழிக்கிறோம்.
நிறைய பேசினால் நிறைய கத்துகலாம். 15 நாள்
வருகிறது.
மீதி 81 நாட்கள் (96-15=81).
.
7. ஒரு வருடத்திற்கு 35 நாட்கள்
தேர்வு எழுதியே கழிப்பதால் , மீதி 46 நாட்கள்
(81-35=46).
.
8. காலாண்டு,அரையாண்டு, பண்டிகை தினம்
விடுமுறைகள் 40 நாட்கள்..
மீதி 6 நாட்கள்(46-40=6).
.
9. உடம்பு சரியில்லாமல் எடுக்கும்
விடுப்பு குறைத்தது
3 நாட்கள். மீதி 3 நாட்கள் (6-3=3).
.
10. சினிமா, உறவினர் திருமணம்,திருவிழானு 2
நாள் போய்விடும். மீதி ஒரு நாள்
(3-2=1).
.
11. அந்த ஒரு நாளும் அந்த பையன் பிறந்த நாள்..
.
பின்ன எப்படி தேர்வில் அதிக மதிப்பெண்கள்
பெறமுடியும்....?












மிக நல்ல ஆராய்ச்சி....

சிவனேன்னு இனிமேல் பள்ளிக்கூடங்களை எல்லாம் , இவை எதுவுமே தேவைப்படாத குத்துக்கல் , பாறாங்கல், களிமண், சாக்கடை +  பையன்கள் அதிக மார்க் வாங்கவேண்டும் என்று அறிபெடுத்து அலையும் பெற்றோர்கள் - இவற்றை வைத்துக்கொண்டே நடத்திக்கொள்ளலாம். 

இது போன்ற அறிவற்ற அரிப்புகளால்தான் மனிதன் , மனித குணங்களை இழந்து வருகிறான், நிம்மதியை இழந்து வருகிறான், அதனால் குற்றங்களை செய்கிறான், குற்றங்கள் அதிகமாகி வருகிறது நாளுக்கு நாள். 

பிறவி வந்தது ஏன் , எதற்கு,... என்று தெரியாத, 
அரைவேக்காடுகளின் அரிப்புகள்கள் அழிவினையே தரும் ! 

யாரும் படிப்பதற்காகப் பிறப்பதில்லை...
வாழ்வதற்காகவே பிறக்கிறார்கள்...

இது தெரியாத கொடூரர்களுக்கெல்லாம் 
ஏன் குழந்தை பிறக்கிறதோ தெரியலை. 
ஒருவேளை ஏராளமான கொடுமைகளை செய்த 
பாவிகள் வந்து இவர்களுக்கு பிறந்து 
பாபத்தை கழிப்பார்கள் போலும்!