பொங்கல் கொண்டாட - சுவையான செய்திகள்... :)

Leave a Comment
பொங்கல் என்று கொண்டாடப்படும் மகர சங்கராந்தியை 
எப்படி கொண்டாடுவது....



புதுப்பானை, புதுஅரிசி, சர்க்கரை, பயறு, தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, சாம்பிராணி, கற்பூரம், கரும்பு, இஞ்சி இலை, மஞ்சள் இலை போன்ற பொருட்கள்  பொங்கலில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறன. இப்பொருட்கள் அனைத்தையும் முதல் நாளே வாங்கி கொள்ளவும். 


தைப்பொங்கல் தினத்தன்று ஒவ்வொருவரும் தம் வீட்டுப் பொங்கல் படையலானது சூரியன் உதிக்கும் போதே முதல் நல்விருந்தாக அமைய வேண்டும் என்ற உணர்வுடன் அதிகாலையே விழித்தெழுந்து பொங்கலுக்கான ஆயத்தங்களைச் செய்யவும். 

எல்லோரும் அதிகாலையில் குளித்து (தலை முழுகி), வீடு பெருக்கி, கழுவி, முற்றம் கூட்டி, வாசலில் சாணம் கொண்டு மெழுகி அதில் உலக்கை வைத்து, அரிசி மா, மஞ்சள் மாவினால் அல்லது செங்கட்டி மண்ணால் கோலம் போடவேண்டும். சிமெண்டினால் ஆன முற்றம்  என்றால் அதனை சுத்தம் செய்து கழுவி கோலம் போடவும்.


சூரிய பகவானை வரவேற்க வீட்டு வாசலில் (கதவு நிலையில்) மாவிலை கட்டிவைக்கவும். 


புதுமணமக்கள் இருப்பவர்கள் பொங்கல் விழாவை ”தலைப் பொங்கல்” என வெகு சிறப்பாக கொண்டாடுவார்கள். வீட்டிற்கு வெள்ளையடித்து, வீட்டை அலங்கரித்து, தாமும் புத்தாடை அணிந்து சூரிய பகவானின் ஆசியைப் பெறுவதில் கண்ணும் கருத்துமாக இருக்கவும்.


துக்க நிகழ்வுகள் நிகழ்ந்த குடும்பத்தினர் பொங்கல் விழாவை ஒரு வருடத்திற்கு தவிர்த்துக்கொள்ளவும்.


வடக்கு வாசல் அல்லது கிழக்கு வாசல் வீடுகளாக  இருக்கும் பக்ஷத்தில் வீட்டு முற்றத்தில் காலையில் சூரிய ஒளி விழக்கூடியதாக அமைந்திருப்பதனால் சூரிய ஒளி பற்றி சிந்திக்க தேவை ஏற்படுவதில்லை. ஆனால் வீடு மேற்கு அல்லது தெற்கு வாசல் வீடுகளாக  இருக்கும் பக்ஷத்தில் சூரிய ஒளி படும் படியான இடமாக தேர்ந்தெடுத்தல் அவசியமாகின்றது. 


வெளிநாடுகளில் வசிப்பவர்கள் காலநிலை, வாய்ப்புகள் மற்றும்  சட்டங்களுக்கு ஏற்ப பொங்க வேண்டி இருப்பதனால் வசதிகளை கருத்திற் கொண்டு வீட்டு வாசலை சுத்தம் செய்து பொங்கல் பொங்கி சூரியஒளி படும் இடத்தில் படைத்து வழிபடவேண்டும். 


நாற்சதுரமாக நாற்புறமும் வாசல் வைத்து கோலம் போட்டு குறிக்கப்பட்ட இடத்தை புனித இடமாக மதிக்கவும்.  கோலம் போடப்பெற்ற இடத்தினை நான்கு கம்புகள் நட்டு அவற்றில் கயிறு கட்டி  தோரணம், மாவிலை தொங்க விட்டு, கோலமிட்டு அலங்காரம் செய்யவும்.

புனிதமாக்கிய இடத்தின் நடுவில் புதிதாக மண்ணினால் பிடித்து வைத்த மூன்று அடுப்பு கட்டிகளையும் வைத்து பொங்கல் பானை வைப்பதற்கு அடுப்பை தயார்படுத்தவும்.

பிறகு நல்ல நேரம் பார்த்து, வீட்டின் சுவாமி அறையில் தீபம் ஏற்றி வணங்கியபின் சூரிய பொங்கலை ஆரம்பிக்கவும்.

பொங்கல் பானைக்கு அருகில் குத்துவிளக்கு ஏற்றவும்.

வாழை இலை போட்டு, இடது ஓரமாக தாழி நிறைய பச்சை நெல் வைக்கவும். இலையில் பச்சரிசியை கொட்டிப் பரப்பவும். அதன் மேல் பூசணிக் காயின் ஒரு துண்டு, அவரை, சீனி அவரை, பிடி கிழங்கு, சிறு கிழங்கு, கருணைக் கிழங்கு, கத்தரிக்காய், வள்ளிக் கிழங்கு, இவற்றில் முடிந்தவரை கிடைத்தவைகளை வைக்கவும். பக்கத்தில் வெல்லமும் பச்சரியும் கலந்த காப்பரிசி சிறிது வைக்கவும். வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள் கிழங்கு, ஒரு பாத்திரத்தில் பால்  ஆகியவற்றையும் வைக்கவும்.

இரண்டு கரும்புகளை சாய்த்து வைக்கவும். [ ஒற்றையாக வைப்பது நல்லதில்லை. ] அவை மன்மதனும் ரதிதேவியும், அதுபோல குடும்பத்தை நடத்தும் இனிமையான தலைவனும் தலைவியும்.  இருவரின் வாழ்வும் குடும்பத்தில் அனைவருக்கும் மகிழ்வு தருவதாக இனிமையாக அமையட்டும் என்று குறிப்பது.

பொங்கல் அடுப்புக்காக செய்த விசேஷ கற்களிலோ அல்லது மூன்று கற்கள் வைத்தோ [ அல்லது மண் அடுப்பிலோ ] புதிய பானையை வைக்கவும் [ மண் பானையே சிறப்பு ]. புதுப்பானையின் கழுத்தில் மாவிலை, இஞ்சி இலை, மஞ்சள்இலைகளைக் கட்டி(காப்புக் கட்டி), விபூதிக் குறிகள் வைத்து, திலகமிட்டு புனிதமாக்கவும்.  அடுப்பினில் விறகுகளை வைக்கவும்.

இந்த அமைப்புக்கு அருகில் திரு விளக்கினை ஏற்றவும். விளக்கிற்கும் குல தெய்வம் இருக்கும் திசை நோக்கியும், சூரிய பகவானுக்கும், அடுப்பிற்கும்  அகர்பத்தி காட்டவும்.

தேங்காய் உடைத்து, உடைத்த தேங்காயிலிருந்து தேங்காய் குடுமியை நீக்கவும். தேங்காய் மூடிகளை இலையில் அல்லது அருகாமையில் வைக்கவும்.

விளக்கிற்கும் குல தெய்வம் இருக்கும் திசை நோக்கியும், சூரிய பகவானுக்கும், அடுப்பிற்கும்  ஆரத்தி காட்டவும்.   


[ இப்படி பொங்கல் பொங்கும் முன் சூரிய பகவானுக்கு வீட்டின் சுவாமி அறையில் தீபம் ஏற்றி வணங்கியபின் சூரிய பொங்கலை ஆரம்பிக்கவும். ]


குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் ஒன்றுகூடி தோத்திரங்கள் பாடி, சாணத்தினால், அல்லது மஞ்சள் பொடியால் பிள்ளையார் பிடித்து வைத்து (பிள்ளையார் சிலையும் வைக்கலாம்), நிறைகுடம் வைத்து, குத்துவிளக்கு ஏற்றி, தேங்காய் உடைத்து வைத்து தூபம், தீபம் காட்டி  விநாயகரை வழிபெற்றபின்,  அடுப்பில் உள்ள பானையில்  பாலும், நீரும் விட்டு, அடுப்பில் நெருப்பு மூட்டி,  பொங்க வைக்கவும். 


பால் பொங்கி எழுந்து வழியும் வரை நெருப்பை கூட எரிய விடவும். பால் பொங்கி வழியும்போது கடவுளை வணங்கி ”பொங்கலோ பொங்கல்” என உற்சாகமாக, ஆரவாரம் செய்து, மணி ஓசை எழுப்பி,  புது அரிசியை வீட்டுத் தலைவர், தலைவி, பிள்ளைகள் என அங்கு இருப்போர் அனைவரும், ஒவ்வொருவராக இரு கைகளினாலும் அரிசியை அள்ளி எடுத்து மூன்று முறை ( பிரதட்சிணமாக -- வலஞ்சுழியாக ) சுற்றி பானையில் இட்டு மகிழ்ச்சியுடன் அடுப்படியை தொட்டு வணங்கிக் கண்களில் ஒற்றிக்கொள்ளவும். .


காத்திருந்து அரிசி வெந்து பொங்கல் தயாரானதும் இறக்கிவிட்டு, சர்க்கரைப் பொங்கல் செய்யவும்.

பிறகு சக்கரைப் பொங்கலுக்கு பயிற்றம் பருப்பு, சக்கரை, கஜு, ஏலக்காய் முதலியவற்றை போட்டு பொங்கல் செய்யவும்.

பிறகு, தேவைக்கு ஏற்ப சாம்பாரும் (காய் கறியும்) தயாரிக்கவும்.


பால் பொங்கி அரிசி போட்டபின் பானையில் இருக்கும் மிதமிஞ்சிய நீரை ஒரு சுத்தமான பாத்திரத்தில் எடுத்து அதனை பூஜைகள் முடியும் வரை வைத்திருந்து அதனை மாவிலை கொண்டு வீட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் படும் படியாக தெளிப்பதும் வழக்கம். அந் நீரில் சூரியனின் சக்தி இருப்பதால் சூரிய பகவானின் சக்தி வீட்டின் எல்லா இடங்களிலும் பட்டு பிரகாசிக்கும் (தோஷங்கள் நீங்கும்). 



பொங்கிய பொங்கலை ஒரு தலை வாழையிலையில் வைத்து, அதன் மேல் பகுதியை குழிவாக்கி அதன் மேல் வாழைப்பழத்தை உரித்து வைத்து அதன் மீது தயிர் விட்டு, சக்கரையும் வைக்கவும். பலகாரங்களை (வடை, மோதகம், முறுக்கு) என்பனவற்றை இன்னொரு தலைவாழையிலையிலும், சுத்தம் செய்யப் பெற்ற பழங்களை வேறு ஒரு தலை வாழையிலையிலும் வைக்கவும். 


படையல் படைக்கும் போது (சூரியனுக்கு) வலப் பக்கத்தில் இலையின் அகன்ற பகுதி இருக்குபடி படைத்தல் வேண்டும்.  வாழை இலைகளில் படைத்த பின், தேங்காய் உடைத்து வைத்து சூரிய பகவானுக்கு தூப, தீபம் ஆராத்தி எடுத்து அனைவரும் பக்தியோடு ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி, அல்லது பஜனை பாடி சூரியனை வணங்கவும்.

ஆரத்தி காட்டும்போது இதனை சொல்லி மற்றவர்கள் திரும்பச் சொல்லவும்...


          சூரிய வந்தனம்

சூரியன் நீயே தந்தையர் தந்தை
சூரியன் நீயே உலகின் தந்தை
சூரியன் நீயென் வாழ்வைத் தந்தாய்
சூரியன் நீயென் உயிராய் நின்றாய்

நீ தந்தவற்றை உனக்கே தந்தேன்
நன்றிகள் அனைத்தையும் உனக்கே சொன்னேன்
அறம் பொருள் இன்பம் வீடனைத்தையும்
அடையும் திறன்களை அளித்திடுவாயே!

என்று சொல்லி வழிபட்ட பின் சூரியனைப் பார்த்து நமஸ்காரம் செய்து எழவும்.

சிறுவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடலாம்.

பின்னர் காகத்திற்கு பொங்கல் வைக்கவும். முடிந்தால் காகம் முதலில் சாப்பிடும் வரை காத்திருக்கவும். பிறகு குழந்தைகள் அல்லது இருப்பவர்களில் இளையவர்களுக்கு சர்க்கரைப்பொங்கல் கொடுக்கவும்.


பிறகு சூரியனுக்கு படைத்த (படையல்) பொங்கலை குடும்பத்தில் அனைவரும், வந்துள்ள அன்பர் நண்பர்களுடன் சேர்ந்து உண்டு மகிழவும்.  


உறவினர்கள், நண்பர்களில் துக்க நிகழ்வுகள் அல்லது வேறு சமூகத்தவர் என்னும் காரணமாக பொங்கள் செய்யாது இருந்தால் அவர்களுக்கும் தமது பொங்கலை பரிமாறி அவர்களையும் மகிழ்விக்கவும்.

முதலில் குடும்பத் தலைவனும் தலைவியும் கரும்பினை துண்டுகளாக வெட்டி மற்றவர்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும்.


இந்த நல்ல நாளில் சச்சரவுக்கான, விவாதத்துக்கான பேச்சுக்கள் வருமாயின் தவிர்க்கவும். 


இந்தப் பொங்கல் தினம் சங்கராந்தி என்ற பெயரிலும், மகர சங்கராந்தி என்ற பெயரிலும் பாரத நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

பூமி சுற்றும் விதத்தில், இனி சூரியனை மகர ராசியில் பார்க்க முடியும். இனி இரவு குறைந்து பகல் அதிகரிக்கத் துவங்கும். அதனால், இந்த நாளைக் கொண்டாடினால் வாழ்வில் இருளும் அறியாமையும் குறைந்து ஒளியும் ஞானமும் அதிகரிக்கும்.  J

ஆண்டுதோறும் தை மாதம் முதல் ஆனி மாதம் வரையுள்ள ஆறு மாதங்களில் சூரியனின் காட்சி [ அல்லது பயணம் ] வட பகுதியில் அமைவதால்  உத்தராயணம் என்றும், ஆடி முதல் மார்கழி வரையுள்ள மாதங்களில் சூரியனின் காட்சி [ அல்லது பயணம் ] தென் பகுதியில் அமைவதால்  தட்சிணாயணம் என்றும் கூறப்படுகிறது.



இதில் தை மாதம் முதலாம் நாளை மகர சங்கராந்தி, தைப் பொங்கல் என்று கொண்டாடுகிறோம். 

அன்றைய தினம் சூரிய வழிபாடு செய்ய மிக உகந்த நாளாகும். எனவேதான் அன்று சூரியனுக்கு விருப்பமான சர்க்கரைப் பொங்கல், கரும்பு முதலிய பொருட்களைப் படைக்கிறோம்.

சூரியனை வழிபடுவதால் உலகில் அடைய முடியாதவையே கிடையாது என வேதம் கதிரவனைப் பலவாறும் புகழ்கிறது. "நாஸ்திகர்களாலும் இல்லை என்று கூற முடியாத கடவுள் சூரிய பகவானே"என்று வேதம் கூறுகிறது.

மேலும், சூரியன் ஆன்மாவைத் தட்டி எழுப்பி நல்வழிப்படுத்துபவர் என்பதை "ஓம் ய ஏஷோந்தராதித்யே ஹிரண்மய புருஷ" எனப் புகழ்ந்து காட்டுகிறது.

இந்த கால கட்டத்தில் சூரியனை இயக்கும் ஆதித்ய தேவன் உள்ளம் குளிர்ந்து அருள் பொழிபவராக இருப்பதால், எல்லா சுபகாரியங்களையும் இப்போது, இந்த தை மாதத்தில் துவக்கிக்கொள்ளுகிறார்கள்.  


“மாட்டுப் பொங்கல்”



பொங்கல் தினத்திற்கு அடுத்தநாள் “பட்டிப் பொங்கல் / மாட்டுப் பொங்கல்” தினமாக உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்துக்கும் இயற்கைக்கும் நன்றி உணர்வை நினைவுக்குக் கொண்டுவரும் நாள்.


அதற்கு அடையாளமாக பசுவுக்கும், மாட்டுக்கும், கால்நடைகளுக்கும், அலங்காரம் செய்து கொண்டாடும் வழக்கம். 




அன்றைய தினம் மாடு வளர்ப்போர் மாடுகளைக் குளிப்பாட்டி, விபூதி குறிகள் வைத்து, சந்தனம், குங்குமம் பொட்டுகள் இட்டு, மலர் சாத்தி அல்லது மலர் மாலை அணிவித்து, மாட்டின் கொம்புகளுக்கு வர்ணம் பூசி அலங்கரித்து;  “பொங்கலோ பொங்கல் - மாட்டுப் பொங்கல்;  மனசு பெருக - பால் பானை பொங்க; நோயும் பிணியும் - தெருவோடு போக”  என்று கோஷமிட்டு, மாட்டுத்தொழுவத்தில் பொங்கல் பொங்கவும். மாட்டை இறைவனின் அருளாக  மதித்து அதற்கு பொங்கலை படையல் படைத்து,  உண்ணக் கொடுக்கவும்.

மாடு உண்ட எச்சில் தண்ணீரை மாட்டுத் தொழுவத்தில் தெளிக்கவும்.


பிறகு அனைவருடனும் சேர்ந்து உண்டு மகிழவும்.


மாடு வளர்க்காதோர், மாடு வளர்ப்போரின் வீட்டுக்கு சென்று சேர்ந்து கொண்டாடி, மாட்டுக்காக தானங்களை செய்து வருவது சிறப்பு.

மாட்டுப் பொங்கலின் போது கிராமங்கள் தோறும் ஜல்லிக்கட்டு போன்ற பலவித விளையாட்டுக்களை நடத்தி இளம் தலைமுறைக்கு பலவித திறமைகளையும், ஊக்கத்தையும், மற்றவர்களுடன் அறிமுகம், பழகும் திறமைகள்,...  போன்றவைகளை கொடுத்து, கூச்சம் நீக்கி, ஒற்றுமையாக வாழ பழக்கப்படுத்துவதும் - பெரியோர் கடமைகள்.


பொங்கலோ பொங்கல் !!!!

 நாமும் செய்வோம் - நண்பருக்கும் சொல்லுவோம்! 



சித்தர்கள் ரிஷிகளின் மந்திரக் கட்டுக்குள் - பாரதம்!

Leave a Comment

இது ஒரு உண்மை அவ்வளவுதான்.  

இதில் என் கருத்து, அறிவுரை என்று எதுவும் இல்லை. 



இந்த பாரத நாடு ஜவஹர்லால் நேருவோ காந்தீஜீயோ பெற்றுப் போட்டது அல்ல.
1947 ஆகஸ்டு 15லும் பிறந்தது இல்லை.

ஆயிரம் ஆயிரம் தலைமுறைகளாக ஆயிரம் ஆயிரம் சிரமங்களை ஆயிரம் ஆயிரம் தியாகத்தினால் கடந்து வந்துள்ளது.

ஆயிரமாயிரம் புயல் வெள்ளங்கள், நில நடுக்கங்கள், கடும் பஞ்சங்கள், திருடர்களின் படையெடுப்புக்கள், சதிகாரர்களின் படையெடுப்புக்கள், வியாபாரிகளின் படையெடுப்புக்கள்,...... 

இவைகளால் வந்த வறட்சி, வலி வேதனைகள், பசி பட்டினிகள், பெரும் கொலை போன்ற கொடுமைகள்,.....

எல்லாவற்றையும், தாங்கி வாழ்ந்து, அவைகளிலிருந்து வெளிவர இன்னுயிர் தந்து போராடிதான் வாழ்ந்து வந்துள்ளது....  

ரிஷிகள் தந்த மன அமைதியினால், கிடைத்த வாழ்க்கை அனுபவத்திலிருந்து இருக்கும் இயற்கையை ஏற்றும் மதித்தும் இன்பமாய் வாழ ஆயிரம் அழகிய வழிகளை படிகளை வடிவமைத்து வந்துள்ளது....

திருட வந்த பலர் இங்கு ஆட்சியாளனாய் அரியணையில் அமர்ந்தனர், அவர்களிடமிருந்து, அவர்களிடமிருந்து பலமுறை இந்த நாடு விடுதலை பெற்றுள்ளது, 1947 ஆகஸ்டு 15 மாத்திரமல்ல நமக்கு விடுதலை நாள்....

என்குழந்தைகள் இப்படி வாழ்ந்து பெருமிதமும் பெருவாழ்வும் அடைய வேண்டும் என்று ஆசைக் கனவுகளுடன் அவர்களால் அணு அணுவாய் சிந்து சிந்தித்து வடிவமைக்கப்பட்ட கிராமங்கள், வீதிகள், நகரங்கள், குளங்கள், வயல்வெளிகள், கோவில்கள், நீதி நூல்கள், இதிஹாச புராணங்கள், பொழுது போக்குக் கலைகள், ஆட்சி முறைகள், நீதி நெறிகள்,....  
அவர்களின் வயிற்றில் பிறந்து அவர்கள் கொடுத்த இந்த வளங்களை எல்லாம் அனுபவித்துக்கொண்டு, ஆனால், எந்த ஆசை கனவுகளுடன் அவர்கள் இவைகளை தியாகம் பல செய்து ஏற்படுத்தினார்களோ அவைகளை கேட்கவும் கற்கவும் தயார் இல்லாத சந்ததிகள் அறிவு அற்றவர்கள், நன்றி உணர்ச்சி அற்றவர்கள், நீதி நியாயம் தெரியாத மிருகங்களே, எல்லை மீறி அனுபவிக்கும் திருடர்களே, பெற்றோர் முன்னோர்களின் துரோகிகளே,

அவர்களின் தியாகங்களை மறக்கடித்து, துளி பிச்சை போட்டவர்களை பெரிய தியாகிகள் என்று பேசிக்கொண்டு,...
அவர்களின் வாழ்க்கை நீதிகளை மறக்கடித்து விட்டு, திருட வந்தவன் நம்மை சுரண்டவும், நம்மை முட்டாளாக்கி அடிமையாக வைத்துக்கொள்ளவும், ஏற்படுத்திய கல்வியையே நமது கல்வியாகவும், அதற்காகவே அவன் ஏற்படுத்திய சட்ட முறைகளையே நமது நீதியாகவும் ஏற்றுக்கொண்டு வாழ்வது அறிவோ....

சுகம் பல தியாகம் செய்து, கருத்துக் கனவுகளுடன், கொள்கைக் கனவுகளுடன் நாட்டைக்கட்டிய முன்னோர்களின் விருப்பங்களுக்கு எதிராக வாழ்வதற்கு அவர்களுடைய நாட்டில் ஏன் வாழவேண்டுமோ? அது நேர்மையோ? அது நியாயமோ? அது தர்மமோ? அது பன்பட்டவனின் அடையாளமோ? அது திருடர்களின் செயல் இல்லையோ? அது அடாவடிகளின் செயல் இல்லையோ? அது ரவுடிகளின் செயல் இல்லையோ?

நியாயம் என்று நமக்குத் தோன்றுவது....
உலகில் மனிதனாகப் பிறந்தவன் முன்னோர் யாருடைய கருத்துக்களையும் கேட்கவேண்டும் என்று கட்டாயம் கிடடியாது, அவரவரின் இஷ்டத்திற்கு சுதந்திரமாக வாழலாம்.
ஆனால் அவரவரின் கருத்துக்கு ஏற்ற நாட்டினை கண்டுபிடித்து அங்கு வாழ்ந்துகொள்ளவேண்டும்.
அமெரிக்காவின் சாலை விதிகளை இங்கு பாரதத்தில் கடைபிடிக்க முடியாதே அப்படித்தான்.

பல ஆயிரம் தலைமுறைகளாக தனக்கு என்று ஒரு கருத்து ஓட்டத்தை வைத்துக்கொண்டு வாழும் ஒரு தேசத்தை, புறம்போக்காகப் பார்ப்பதும் பாபம், ஓட்டத்தை பாதிக்காத, ஓட்டத்திற்கு உதவும் முறைகள் இன்றி இஷ்டத்திற்கு மாற்றுவதும் பாபமே.
அப்படி செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் ரிஷிகளின் சாபங்களை அடைகிறார்கள். அவர்களின் சந்ததிகள் அழிவார்கள்.
இதே காரணத்தினால்தான் காந்தீஜீயின் வம்சம் கெட்ட நடத்தைகளால் அழிந்தது. இதே காரணத்தால்தான் ஜவஹர்லால் நேருவின் குடும்பமும் கொலை செய்யப்பட்டே அழிந்தது. அடுத்து வருபவர்களும் மன நோயாளிகளாகவே இருப்பார்கள்.
கருணாநிதியின் குடும்பமும் சீரழிவையே அடையும். இனி வரும் சந்ததிகள் மன நோயாளிகளாகவே இருப்பார்கள்.
ஈ.வே.ராமசாமியின் குடும்பமும் சீரழிந்துவிட்டது. அவரது கொள்கை குடும்ப வம்சத்தைர்களையும் கூட இந்த பாபம் பாதித்து நிம்மதியான வாழ்வை இழந்து அழிந்தே வருகிறார்கள்.
அவர்கள் யாருக்குமே இந்த பாப காரணம் தெரியாமல் - எல்லாம் எதேச்சையாக என்று சப்பைக்கட்டு கட்டி வருகிறார்கள்.

இந்த பாரத நாடு முழுவதும் சித்தர்களின், ரிஷிகளின் சங்கல்பத்தினால் கட்டுமானம் செய்யப்பட்டு உள்ளது. சித்தர்கள் ரிஷிகள் இந்த ஒரு குறிப்பிட்ட திசையில் செல்லவே இதனை வடிவமைத்து மந்திரக் கட்டும் செய்து வைத்துள்ளார்கள். அதை ஏற்காமல் இங்கு வாழ்பவர்களை அது நிச்சயம் பாதிக்கும். பாதித்து வருகிறது.

நாட்டின் சித்தர்கள் ரிஷிகளின் இந்த நாட்டின் விதிகளை மாற்ற முயலுபவர்களை அது அழிக்கும். அவர்களின் சந்ததிகளையே கூட அழித்துக் காட்டும். 

அது இந்த பாரத நாடு மட்டுமல்ல. இந்த பாரத நாட்டு குடிமக்கள் அனைவரும் ரிஷிகளின் சந்ததிகளே. 

பாரத தேசம் என்ற சொல்லின் பெயரிலேயே அது அறிவிக்கப்பட்டே உள்ளது. பாரதம் என்றால் பா நெறி அல்லது வேத ஞான நெறிக்காக அர்ப்பணிக்கப் பட்டு கட்டுமானம் செய்யப்பட்டது என்று பொருள்! 

அதனால் இந்த பாரத மக்களை, அதாவது இந்த நாட்டினை வடிவமைத்த உரிமையாளர்களான சித்தர்கள் ரிஷிகளின் சந்ததிகளான அவர்களை ஏமாற்றுதல், அவர்களிடம் லஞ்சம் வாங்குதல், அவர்களை அல்லது அவர்களின் சமைய உணர்வுகளை  மதிக்காமல் ஆட்சி செய்தல், அரசு நிர்வாகம் செய்தல், சட்டங்களை இயற்றுதல், நீதி என்ற பெயரில் அநீதிகளை தீர்ப்பாகக் கொடுத்தல்,..... அனைத்துமே மிகப் பெரிய பாப காரியங்கள்.


அதனால்தான் ஆன்மீகக் வாழ்வு இல்லாத அரசியல் வாதிகள் இந்த நாட்டில் நிம்மதி இல்லாத தனிப்பட்ட வாழ்க்கையையே அனுபவிக்கிறார்கள். அவர்களது சந்ததிகளும் நன்னெறியில் செல்ல இயலாது கெட்டு சீரழிகிறார்கள்.

லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை யாரும் தண்டிக்கும் முன் அவர்களது வம்சத்தை ரிஷிகளின் இந்த மந்திரக் கட்டுமானமே அழித்து வருகிறது.

இந்த நாட்டின் இந்த கட்டுமானத்திற்கு எதிரான பணி, சிந்தனை, தீர்ப்புகள்,.... என்று வாழ்ந்த நீதிபதி பணியில் இருப்பவர்களின் குடும்பங்களும்கூட சில தலை முறைகளில் அழிந்தே வருகிறது. அவர்களும் மற்ற பிறவிகளில் இழிந்த பிறவிகளையே அடைந்து கடன் அடைத்து வருகிறார்கள்.

உண்மையில் வெள்ளையர்கள் இங்கு திருட வந்தார்கள், ஆட்சி செய்யத் துவங்கிவிட்டார்கள்.

அதே சமையத்தில் பிரிட்டிஷ் உலகில் உயர்ந்த பலம் கொண்ட நாடாக இருந்தது. அவர்கள் கொள்ளை அடித்து சென்றபோது வரை அவர்களுக்கு பெரிய பாதிப்பு இருந்தது இல்லை.

அனால் இந்த நாட்டில் மதம் மாற்றத்தை அதிகரித்து, இந்த நாட்டின் கல்விமுறையையும் மெக்காலே கல்வி முறையினால் மாற்றினார்கள். பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் உலகெங்கும் விழத் துவங்கியது. அழிந்து சுருங்கிப்போய் விட்டது.

இதற்கெல்லாம் பலர் எதேச்சை என்று காரணம் கற்பிக்கலாம். ஆனால் பிரிட்டிஷ் விழுந்த காரணம் ரிஷி சாபமே.  

இசுலாமியர்களும் இந்த நாட்டிலிருந்து திருடிச்சென்றவரை அவர்களுக்கு எந்த பெரிய பிரச்சினைகளும் இருந்ததில்லை. ஆனால் அவர்கள் இங்கு இருந்து ஆட்சி செய்யத் துவங்கினார்கள். அழிந்து போனார்கள்.

இசுலாமியர்கள் அல்லது முஸ்லீம்கள் உலகில் எங்கெல்லாம் படை எடுத்துச் சென்றார்களோ, அங்கெல்லாம் பிடித்த நாடுகளை இசுலாமிய நாடாக ஆக்கிவிட்டார்கள். ஆனால் இங்கு முடியவில்லை. அதன் காரணம் இந்த ரிஷிகளின் மந்திரக் கட்டுமானமே.

அதேபோலவே கிருஸ்தவர்களும் உலகில் எங்கெல்லாம் படை எடுத்துச் சென்றார்களோ, அங்கெல்லாம் பிடித்த நாடுகளை கிருஸ்தவ நாடாக ஆக்கிவிட்டார்கள். ஆனால் இங்கு முடியவில்லை. அதன் காரணமும் இந்த ரிஷிகளின் மந்திரக் கட்டுமானமே.

புத்தர் இந்த நாட்டில் கௌரவத்துடன் வாழ்ந்தார். மதிப்புடன் மரியாதையுடன் வாழ்ந்தார். அவர் வேத நெறிக்கு புறம்பாக வாழ்ந்தது பேசியது என்பது என்றுமே இல்லை. அவர் இந்த வேத நெறிக் கட்டமைப்புக்கு உள்ளே இல்லாதவர்களை, வர விரும்பாதவர்களை, காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தவர்களை முதலில் மனிதத் தன்மைகளுக்கு கொண்டுவருவோம். பிறகு அவனே தனது பகுத்தறிவின் துணையுடன் வேத நெறிக்குள் வருவான். ஆனால் அதனை வெளிப்படையாக கூறினாள் ஒதுங்கிவிடுவார்கள்,... என்ற காரணங்களால் அவர் எதுவும் வேத நெறிகளை பேசாமல் மனித நெறிகளை மட்டுமே பேசினார்.

ஆனால் அவரது வழிவந்தவர்கள் புத்தர் பேசியது வேதம் வேண்டாம் என்று பேசினார்கள். அழிந்தார்கள். உலகமெங்கும் வளர முடிந்த அவர்களின் அந்த புத்த மதம் என்று அவர்கள் கூறிய கோட்பாடுகள், இந்த பாரத நாட்டில் இல்லாமலேயே ஆகிவிட்டது.

இதேபோன்று இன்னமும் ஆயிரக் கணக்கான நிகழுவுகளை, உதாரணங்களை காட்ட முடியும். கட்டுரை நீளும் என்பதால் சுருக்கிக்கொண்டு முடிக்கிறேன்.



ரிஷிகளின் இந்த சூக்ஷ்ம மந்திரக் கட்டுமானம் வேலை செய்யும் சூக்ஷம விதிகளை, நியதிகளை, முறைகளை பார்க்கும் சக்தியை இறைவன் அருளினான். நாமும் பார்க்கிறோம். அதனால் இந்தக் கட்டுரையின் மூலம் நான் அந்த உண்மையை அறிவிக்கிறேன். அவ்வளவுதான்.



ஓம். ஸ்ரீ ரிஷிப்யோ நமஹ. 

50 ஆண்டுகளில் உலகிலேயே வளமான நாடு பாரதம்!

Leave a Comment
ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு வளம் இருக்கிறது. அதனால் அந்த நாடுகள் உலக அரங்கில் தலை நிமிர்ந்து வாழ முடிகிறது.

நம் நாடும் பல ஆயிரம் தலைமுறைகளாக உலகிலேயே மிகச் சிறந்த ஒரே நாடாக கௌரவத்துடன் வளம்கொழிக்க வாழ்ந்த நாடு.

அன்னியர் ஆட்சி துவங்கிய ஆயிரம் ஆண்டுகள் முன்புவரை.

பாரதத் தாயிடம் இயற்கை வளம் சற்று குறைவாக இருக்கலாம். ஆனால் அவளது சூக்ஷ்ம விஞ்ஞான ஞான வளத்தினால் உலகைக் கவர்ந்து , உலகை உயர்த்தி வாழ்ந்துவந்தாள்.

பாரதத் தாயிடம் ஆயிரமாயிரம் தலைமுறைகளாக வரும் ஒரு ஞான வளம் இருக்கிறது. அது அன்றும் இன்றும் என்றுமே மனித குலம் முழுமைக்கும் தேவையானது.  ஜாதி, மத, அரசியல், பொருளாதார, தேச வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் விரும்பக்கூடியது. அனைவருக்குமே பிடிப்பது. அனைவருக்குமே மிகப் பெரிய நன்மையை செய்வது. அனைவருக்குமே வேறு எதனாலும் அடையமுடியாத நிம்மதியையும் ஆனந்தத்தையும் தருவது. உண்மையில் அனைவருக்குமே அவசியமானது.  உலகில் வேறு எங்குமே இல்லாதது.



அந்த ஞானத்தை ஒருவனுக்குக் கொடுத்தால் , பெற்றவன் கொடுத்தவனுக்கு தன் வாழ்வில் எதையுமே கொடுப்பான் ! உண்மையில் !

இந்த ஞானத்தைக் கொடுக்கும் திறமையை நாம் இப்போதும் வளர்த்துக்கொள்ள முடியும். இந்த ஞான பலனுக்குக் கைமாறாக உலகம் நமக்கு வாரி வழங்கித்தான் தீர வேண்டும்.

ஒரு கணக்குக்காக , பாரதத்தின் வருமானம் , வேறு எந்த முயற்சிகளால் வரும் செல்வத்தையும் விட குறைந்தது 100 மடங்கு உயரும் ! இது உண்மை நாம் நிரூபிக்கத் தயார் !

ஞானம் என்றாலே நாம் ஏதோ தாழ்வாகப் பார்க்கும் நிலையை சிலர் ஏற்படுத்தி விட்டார்கள் , அது என்ன என்று தெரியாமல்.

ஒரு உண்மையைச் சொல்லுகிறேன். யாரையெல்லாம் நீங்கள் உயர்வாக நினைத்து , முன் மாதிரியாக வைத்து ஓடுகிறீர்களோ , அவர்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுத்தால் , அவர்கள் உங்களுக்கு அடிமை செய்யும் சேவகனாகக் காத்துக் கிடப்பார்கள். இதுவும் உண்மை. இதற்கு மேல் என்ன வேண்டுமோ?

அப்படி என்றால் , மற்ற உயர்வுகளெல்லாம் தேவை இல்லை என்று நாம் சொல்லவில்லை. அவைகளை இந்த உலகம் வந்து தானே காலடியில் கொட்டும். நாம் அவைகளுக்காக கையேந்திக் கெஞ்சிக் காத்துக்கிடக்க தேவை இல்லை! கலைக்கக் கலைக்க ஓடி அலையவும் தேவையில்லை!

அரபு நாடு தன்னிடம் இருக்கும் பெட்ரோலை விட்டு விட்டு காய்கறி உற்பத்தி மூலம் பொருள் ஈட்ட முயற்சிப்பது போல இருக்கிறது நமது இன்றைய பாரத மக்களின் கண்ணோட்டங்களும், நாட்டின் பொருளாதார நிபுணர்களின் கருத்துக்களும், பாரத அரசுகளின் முயற்சிகளும்!


நம்மிடம் இருக்கும் இந்த ஞானத்தினை வேண்டி இந்த உலகம் நமக்கு அனைத்தையும் கொடுத்து அடிமையாகி கெஞ்சிக் கதற வைக்க நான் தயார். நீங்கள் ஒத்துழைக்கத் தயாரா?  

இன்னும் ஐம்பதே ஆண்டுகளில் பாரதத்தை உலகிலேயே மிகப் பெரிய பணக்கார நாடாக , உலகமே பார்த்து பெருமைப்படும் , வணங்கும் , போற்றும் தலைமை நாடாக நாம் நிச்சயம் ஆக்க முடியும்.

அதற்கான சொத்துக்களும் வழிமுறைகள் நம்மிடம் இருக்கின்றன ! 



மேலும் விவரங்களுக்கு 9042500500 ; 9042600600 ; 9042 800800

இனைந்து சிந்திப்போம் - இனிய பாதை அமைப்போம்!







சுலப சம்ஸ்க்ருதம் - 24 மணி நேர வகுப்பில் எழுத & படிக்க

Leave a Comment
24 மணி நேர வகுப்பில் சம்ஸ்க்ருதத்தில் எழுத & படிக்க - தமிழ் மூலம்.

நவீன விஞ்ஞான உலகத்தில் சமஸ்க்ருதம் அல்லது சமஸ்கிருதம் எனப்படும் சம்ஸ்க்ருதம் மிக முக்கியமான இடத்தைப் பிடித்து வருகிறது. 

சம்ஸ்க்ருதம் சௌகர்யமான மொழியாக இருப்பதால் விஞ்ஞானிகளுக்கும் வளர்ந்த, வளரும் நாடுகளுக்கும் சம்ஸ்க்ருதம் ஒரு கவர்ச்சியான மொழியாகிஉள்ளது. நாமும் கற்பது மிகவும் நல்லதே. 

குறுகிய  கால வகுப்புகள். 

சமஸ்க்ருதத்தில்  எழுதப் படிக்கத் தெரியாத யாருமே இனி சமஸ்க்ருதத்தில் சுலபமாக எழுதப் படிக்க முடியும் தமிழ் எழுத்துக்களின் உதவி இன்றியே. தனி எழுத்துக்கள் , கூட்டெழுத்துக்கள், வார்த்தைகள் , சுலோகங்கள், ..... அனைத்தையும் சரியான உச்சரிப்புடன் படிக்க முடியும். அதுவும் மிகவும் குறுகிய  காலத்தில்! 


ரிஷிகுடிலில். சமஸ்க்ருதத்தை தமிழ் மூலம் போதிக்க உலகிலேயே சுலபமான புதிய முறை பயன்படுத்தப்படுகிறது.இந்த முறை ஸ்ரீ ஐஸ்வர்ய மஹரிஷி அவர்களால் வடிவமைக்கப்பட்ட முறை. ஒரு ஆண்டில் கற்க வேண்டிய திறமைகள் வெறும் 24மணிநேர வகுப்புகளிலேயே நிச்சயம்...




வகுப்பு நிர்வாக விதிகள்: 

பொது விதிகள்: வகுப்பின் மொத்த கால அளவு 24மணி நேரங்கள். வாரம் ஒருநாள் ஒருநாளில் ஒருமணி நேரம் என்று நடத்தப்படும். ஒரு நேரத்தில் ஒருவருக்கு மட்டுமே வகுப்பு நடத்தப்படும். அல்லது ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் கலந்துகொள்ளலாம். 

தேவைப்பட்டால்  இரண்டுநாள் அல்லது மூன்றுநாள் என்றோ, ஒரு நாளில் இரண்டுமணி நேரம் அல்லது மூன்று மணி நேரம் என்றோ கூட வகுப்பினை அமைத்துக்கொள்ளலாம்.வகுப்பறை, மற்றும் ஆச்சார்யர்கள் கிடைக்கும் பக்ஷத்தில் உங்கள் தேவை பரிசீலிக்கப்படும். 

எந்த விதத்தில் கற்றாலும் ஒரே கட்டணமே. 


வகுப்புகள் இரண்டு பேட்டர்ன்களில் நடத்தப்படுகின்றன. 



பாடத்திட்ட தொகுப்பாளர் ஐஸ்வர்ய மகரிஷிகளே நடத்துவார். மிக உயர்ந்த போதனா முறை. கற்றபின் தாங்களே மற்றவர்களுக்கும் நடத்தவும் முடியும். 


கட்டணம்: ஒரு மணிக்கு ரூ1000/- மட்டும். 




எங்கள் நிறுவனம் ....

[ ரிஷி வித்யா பீடம் 
'ரிஷி குடீர்'
58, சவுத்என்க்லேவ் , சிவராம் நகர், ராமநாதபுரம் , கோவை 641 045

என்ற முகவரியிலிருந்து , இடம் மாற்றப்பட்டுள்ளது. இனி ..... ]


https://www.google.co.in/maps?q=rishikudil&oe=utf-8&gws_rd=cr&um=1&ie=UTF-8&sa=X&ved=0ahUKEwiOiujs9tPLAhUGGI4KHWc6CXQQ_AUIBygB 


'ரிஷி குடில்'
3/16, அரசு ஊழியர் காலனி, [ சுபாஷ் சந்திரபோஸ் பள்ளி அருகில் ], பச்சாபாளையம்ரோடு, 
தீத்திப்பாளையம், பேரூர் - வழி, கோவை 641010 

என்ற முகவரிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

1. கட்டணம்ஒரு மணி நேர வகுப்பிற்கு ரூ600 மட்டும். 

2. பலன் இல்லை என்றால் - விரும்பிக் கேட்டால் - கட்டணத் தொகையில் 50%  வாபஸ் தரப்படும் !

3. ஒரு நேரத்தில் ஒருவருக்கு மட்டும் அல்லது ஒரு குடும்பத்தினருக்கு மட்டும். அனைவருக்கும் சேர்த்து அதே கட்டணம் மட்டும். விதி 2 செல்லாது. 

4. ஒருவேளை, தங்கள் இடத்திற்கு வந்து நடத்தித் தரவேண்டும் என்றாலும், இங்கிருந்து கிளம்பி வந்து நடத்தி திரும்ப வரும் வரை உள்ள நேரத்திற்கு அதே கட்டணமும், கால் டாக்சி கட்டணமும். 



வரைபடத்தில் எங்கள் இருப்பிடம்:

https://www.google.co.in/maps?q=rishikudil&oe=utf-8&gws_rd=cr&um=1&ie=UTF-8&sa=X&ved=0ahUKEwiOiujs9tPLAhUGGI4KHWc6CXQQ_AUIBygB

For more details: 
http://rishivedajnaanayogapeetham.blogspot.in/2016/03/learn-sanskrit-easy.html 

 __________________________________________________________________________


ஆன்-லைன் சம்ஸ்க்ருத வகுப்பு
ஒவ்வொரு மாதமும் 5 வேலை நாட்களில் தினசரி 1 மணி நேரம் என
[ குழந்தைகளுக்கு அல்லது பெரியவர்களுக்கு ]  
விபரங்களுக்கு:
http://rishivedajnaanayogapeetham.blogspot.in/p/courses.html